New Update
/indian-express-tamil/media/media_files/2025/02/24/4VhsYkzxYWYwzeWQ1dQ1.jpg)
போர் வீராங்கனை போல வாள் சுழற்றும் டெல்லி முதல்வர் ரேகா குப்தா எனக் குறிப்பிட்டு சமூக வலைதள பக்கங்களில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
போர் வீராங்கனை போல வாள் சுழற்றும் டெல்லி முதல்வர் ரேகா குப்தா எனக் குறிப்பிட்டு சமூக வலைதள பக்கங்களில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
போர் வீராங்கனை போல வாள் சுழற்றும் டெல்லி முதல்வர் ரேகா குப்தா எனக் குறிப்பிட்டு சமூக வலைதள பக்கங்களில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதன் உண்மைத் தன்மை குறித்து நியூஸ் மீட்டர் இணையப் பக்கம் சார்பில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இந்த உண்மைச் சரிபார்ப்பு நியூஸ் மீட்டர் (newsmeter.in) இணையதளத்தால் செய்யப்பட்டது மற்றும் சக்தி கூட்டுக்குழு (Shakti Collective) நமது இணைய பக்கத்துடன் பகிர்ந்து கொண்டது.
டெல்லி சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மை பெற்ற பாரதிய ஜனதா கட்சி பிப்ரவரி 19, 2025 அன்று ரேகா குப்தாவை முதல்வராக தேர்வு செய்தது. முதல் முறையாக சட்டமன்ற உறுப்பினராக ஷாலிமார் பாக் தொகுதியில் இருந்து தேர்வு செய்யப்பட்ட ரேகா குப்தா பிப்ரவரி 20, 2025 அன்று முதல்வராக பதவி ஏற்றார்.
இந்நிலையில், சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் வீடியோஒன்றில் பெண் ஒருவர் ஆற்றுப்படுகையில் நின்று பூஜை செய்வதும், உடற்பயிற்சிகள் செய்வதும், கோலங்கள் வரைவதும், வாளை சுழற்றுவதுமாக காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இந்த வீடியோவில் காணப்படும் பெண் டெல்லியின் புதிய முதல்வர் ரேகா குப்தா எனக் குறிப்பிட்டு பதிவுகள் பகிரப்பட்டுள்ளன.
‘டெல்லியின் பொறுப்பு இப்பொழுதுதான் ஒரு சரியான நபரிடம் சென்று சேர்ந்துள்ளது. ஆர்.எஸ்.எஸ். கார்ய கர்த்தாவான ரேகா குப்தாவின் பழைய வீடியோ. இப்போது இவர்தான் டெல்லியின் முதலமைச்சர். இனி எல்லாமே சரியாக இருக்கும்’, என பேஸ்புக் தளத்தில் ஒருவர் பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில், சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வரும் வீடியோவின் உண்மைத் தன்மை குறித்து நியூஸ் மீட்டர் இணையப் பக்கம் சார்பில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இந்த உண்மைச் சரிபார்ப்பு நியூஸ் மீட்டர் (newsmeter.in) இணையதளத்தால் செய்யப்பட்டது மற்றும் சக்தி கூட்டுக்குழு (Shakti Collective) நமது இணைய பக்கத்துடன் பகிர்ந்து கொண்டது.
உண்மைச் சரிபார்ப்பு
நியூஸ் மீட்டர் தரப்பில், சமூக வலைதள பக்கங்களில் பகிரப்பட்டு வரும் வீடியோவின் பிரேம்களின் புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடல் செய்து பார்த்துள்ளனர். அப்போது, பிப்ரவரி 19 2025 அன்று நடிகை பாயல் ஜாதவின் இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவேற்றப்பட்ட வீடியோவைக் கண்டறிந்துள்ளனர். சிவாஜி ஜெயந்தியை முன்னிட்டு இந்த செயல்களை செய்ததாக பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவரது இன்ஸ்டாகிராம் கணக்கில் இது போன்ற பல வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. மராத்தி மொழி நாடகமான அபீர் குலாலில் அவர் நடித்தது உள்ளிட்ட பல வீடியோக்களைக் கண்டறிந்துள்ளனர். டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிகை செய்தியின் படி த்ரீ ஆப் அஸ், பாப்லோக் உள்ளிட்ட படங்களில் அவர் நடித்துள்ளார். மேலும், பரீஸ், கோல் மால், மன்வத் மர்டர்ஸ் உள்ளிட்ட படங்களிலும் அவர் பல வேடங்களில் நடித்ததாகவும் கண்டறிந்துள்ளனர்.
இறுதியில், நியூஸ் மீட்டர் தேடலின் முடிவில், வைரலாகும் வீடியோவில் இருப்பது டெல்லி முதல்வர் ரேகா குப்தா அல்ல என்றும், அவர் மராத்தி மொழி நடிகை பாயல் ஜாதவ் எனவும் கண்டறிந்துள்னர்.
இந்த உண்மைச் சரிபார்ப்பு நியூஸ் மீட்டர் (newsmeter.in) இணையதளத்தால் செய்யப்பட்டது மற்றும் சக்தி கூட்டுக்குழு (Shakti Collective) நமது இணைய பக்கத்துடன் பகிர்ந்து கொண்டது.
https://newsmeter.in/fact-check-tamil/viral-video-of-actress-payal-jadhav-claimed-as-delhi-chief-minister-rekha-gupta-744100
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.