New Update
/indian-express-tamil/media/media_files/2025/01/17/AgKmM4qH57fFjkSKHjUJ.jpg)
வானில் இருந்து விழுந்த பறக்கும் தட்டு ஒன்றை விஞ்ஞானிகள் ஆய்வு செய்வதாக குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
வானில் இருந்து விழுந்த பறக்கும் தட்டு ஒன்றை விஞ்ஞானிகள் ஆய்வு செய்வதாக குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
நிலத்தில் கிடக்கும் பறக்கும் தட்டு போன்ற ஒன்றை விஞ்ஞானிகள் பலரும் ஆய்வு செய்வது போன்ற வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதன் கேப்சனில்,“வானில் இருந்து விழுந்து விபத்திற்குள்ளான பறக்கும் தட்டு! அடையாளம் தெரியாத பறக்கும்சாதனத்தை இப்போது விஞ்ஞானிகள் ஆராய்ந்து கொண்டு இருக்கிறார்களாம்! உள்ளே இருப்பவர்களை பிடித்து விசாரித்தால் பல உண்மைகள் தெரிய வரலாம்!” என்று குறிப்பிட்டுள்ளனர்.
இந்த நிலையில், சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் அந்த வீடியோவின் உண்மைத் தன்மை குறித்து நியூஸ் மீட்டர் இணையப் பக்கம் சார்பில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இந்த உண்மைச் சரிபார்ப்பு நியூஸ் மீட்டர் (newsmeter.in) இணையதளத்தால் செய்யப்பட்டது மற்றும் சக்தி கூட்டுக்குழு (Shakti Collective) நமது இணைய பக்கத்துடன் பகிர்ந்து கொண்டது.
உண்மை சரிபார்ப்பு
சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் வீடியோவின் உண்மை தன்மையை கண்டறிய அதன் குறிப்பிட்ட பகுதியை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்துள்ளனர். அப்போது, “கத்தாரில் விழுந்த பறக்கும் தட்டு” என்று இதே வீடியோவுடன் தகவல் பரப்பப்பட்டு வந்தது தெரியவந்ததுள்ளது. மேலும், அதனை மிஸ்பார் (misbar) என்ற அரேபிய ஊடகம் ஃபேக்ட்செக், அதாவது அந்த தகவலின் உண்மைத் தன்மை குறித்து ஆராய்ந்துள்ளது. அதன் முடிவில் ஏ.ஐ தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட வீடியோ என்று கண்டுபிடித்துள்ளது.
மேலும், இந்த வீடியோவை sybervisions_ என்ற இன்ஸ்டாகிராம் பக்கம் வெளியிட்டதாக அந்த செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. கிடைத்த தகவலைக் கொண்டு இன்ஸ்டாகிராமில் sybervisions_ பக்கத்தை ஆய்வு செய்துள்ளது. அப்போது, வைரலாகும் அதே வீடியோ கடந்த டிசம்பர் 31ஆம் தேதி வெளியிடப்பட்டது தெரிய வந்துள்ளது. மேலும், சுயவிபரத்தில் ஏ.ஐ வி.எஃப் எக்ஸ் ஆர்ட்டிஸ்ட் (AI VFX Artist) என்று குறிப்பிடப்பட்டுள்ள அந்த இன்ஸ்டா பக்கத்தில் ஏ.ஐ தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட பல்வேறு வீடியோக்கள் பதிவிட்டப்பட்டுள்ளன. இதனை உறுதிப்படுத்தும் விதமாக காணொலி ஏ.ஐ தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது தான் என்று Truemedia இணையதளத்தை ஆய்வு செய்ததன் மூலம் தெரிய வந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இறுதியில், தேடலின் முடிவில், வானில் இருந்து விழுந்த பறக்கும் தட்டு ஒன்றை விஞ்ஞானிகள் ஆய்வு செய்வதாக சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ ஏ.ஐ தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
இந்த உண்மைச் சரிபார்ப்பு நியூஸ் மீட்டர் (newsmeter.in) இணையதளத்தால் செய்யப்பட்டது மற்றும் சக்தி கூட்டுக்குழு (Shakti Collective) நமது இணைய பக்கத்துடன் பகிர்ந்து கொண்டது.
https://newsmeter.in/fact-check-tamil/manoor-ahamed-mla-attacking-a-policeman-742276
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.