/indian-express-tamil/media/media_files/2025/02/13/eBNEp3ryqQc9H64l41zi.jpg)
ஏ.ஐ மாநாட்டில் பிரான்ஸ் அதிபர் மேக்ரோன் பிரதமர் மோடியிடம் மட்டும் கைகுலுக்காமல் சென்றதாகவும், அவர் பிரதமர் மோடியை அவமதித்ததாகவும் குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
ஏ.ஐ மாநாட்டில் பிரான்ஸ் அதிபர் மேக்ரோன் இந்திய பிரதமர் மோடியிடம் மட்டும் கைகுலுக்காமல் சென்றதாக குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று வைரலாகி வரும் நிலையில், அதன் உண்மைத் தன்மை குறித்து நியூஸ் மீட்டர் சார்பில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது.
ஏ.ஐ மாநாட்டில் பிரான்ஸ் அதிபர் மேக்ரோன் பிரதமர் மோடியிடம் மட்டும் கைகுலுக்காமல் சென்றதாகவும், அவர் பிரதமர் மோடியை அவமதித்ததாகவும் குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
ஏ.ஐ மாநாட்டில் பிரான்ஸ் அதிபர் மேக்ரோன் பிரதமர் மோடியிடம் மட்டும் கைகுலுக்காமல் சென்றதாகவும், அவர் பிரதமர் மோடியை அவமதித்ததாகவும் குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அந்த வீடியோவின் உண்மைத் தன்மை குறித்து நியூஸ் மீட்டர் இணையப் பக்கம் சார்பில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இந்த உண்மைச் சரிபார்ப்பு நியூஸ் மீட்டர் (newsmeter.in) இணையதளத்தால் செய்யப்பட்டது மற்றும் சக்தி கூட்டுக்குழு (Shakti Collective) நமது இணைய பக்கத்துடன் பகிர்ந்து கொண்டது.
ஏ.ஐ. எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொடர்பான உச்சி மாநாடு, ஐரோப்பிய நாடான பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் பிப்ரவரி 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. பிரான்ஸ் அதிபர் மேக்ரோன், இந்திய பிரதமர் மோடி இணை தலைமை வகித்து மாநாட்டை நடத்தினர். இதில், பல நாட்டுத் தலைவர்கள், தொழில்நுட்பத் துறை நிறுவனங்களின் உயரதிகாரிகள் கலந்து கொண்டனர். மாநாட்டில், செயற்கை நுண்ணறிவு தொடர்பான கூட்டு அறிக்கையில், 58 நாடுகள் உள்ளிட்ட 60 பேர் கையெழுத்திட்டுள்ளனர்.
இந்த மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடி அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்றார். செயற்கை நுண்ணறிவு மாநாட்டின் இரண்டாவது நாளான பிப்ரவரி 11 அன்று பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்றினார்.
இந்நிலையில், மாநாட்டு அரங்கத்திற்குள் வந்த பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரோன் அங்கிருந்த உலகத் தலைவர்கள் அனைவரிடமும் கைகுலுக்குகிறார். ஆனால், பிரதமர் மோடியிடம் மட்டும் கைகுலுக்காமல் சென்றதாகவும், பிரதமர் மோடியை பிரான்ஸ் அதிபர் அவமதித்ததாகவும் குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
இந்த நிலையில், சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் வீடியோவின் உண்மைத் தன்மை குறித்து நியூஸ் மீட்டர் இணையப் பக்கம் சார்பில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இந்த உண்மைச் சரிபார்ப்பு நியூஸ் மீட்டர் (newsmeter.in) இணையதளத்தால் செய்யப்பட்டது மற்றும் சக்தி கூட்டுக்குழு (Shakti Collective) நமது இணைய பக்கத்துடன் பகிர்ந்து கொண்டது.
உண்மைச் சரிபார்ப்பு
சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் வீடியோவில் குறிப்பிட்ட தகவல் உண்மைதானா என்பதை கண்டறிய, நியூஸ்மீட்டர் சார்பில் பாரிஸில் நடைபெறும் செயற்கை நுண்ணறிவு மாநாடு குறித்து யூடியூபில் சர்ச் செய்து பார்க்கப்பட்டுள்ளது. அப்போது, ராய்ட்டர்ஸ் (Reuters) ஊடகம் மாநாட்டின் நேரலை வீடியோயை வெளியிட்டு இருந்தது. அதில், 50:30 முதல் 50:56 வரையிலான பகுதியில் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரோன் மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகிய இருவரும் மாநாடு நடைபெறும் பகுதிக்குள் வரும் போதே கைகுலுக்கி மகிழ்ச்சியோடு பேசிக் கொள்கின்றனர். இதனை பிரதமர் நரேந்திர மோடி தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்திலும் புகைப்படமாக பதிவிட்டுள்ளார். தொடர்ந்து, இருவரும் ஒன்றாக இணைந்தே உலகத் தலைவர்களை சந்திக்க அரங்கிற்குள் செல்கின்றனர்.
மேலும், இருவரும் கட்டித்தழுவிகொள்ளும் புகைப்படத்தை பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு, “எனது நண்பர் அதிபர் மேக்ரோனை பாரிஸில் சந்தித்ததில் மகிழ்ச்சி” என்று குறிப்பிட்டுள்ளார். அதேசமயம், பிரான்ஸ் வந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு முறையான அரசு மரியாதை அளிக்கப்பட்ட வீடியோவையும் பிரதமர் மோடியின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலில் வெளியிடப்பட்டுள்ளது.
Ravi de retrouver mon ami le Président Macron à Paris. @EmmanuelMacron pic.twitter.com/AFpYQOP3z4
— Narendra Modi (@narendramodi) February 10, 2025
இறுதியில், நியூஸ் மீட்டர் தேடலின் முடிவில், பிரதமர் நரேந்திர மோடியிடம் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரோன் கைகுலுக்காமல் சென்றதாக வைரலாகும் தகவல் தவறானது என்றும், இருவரும் அதற்கு முன்பாகவோ கைகுலுக்கி கட்டித்தழுவிக்கொண்டனர் என்றும் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
இந்த உண்மைச் சரிபார்ப்பு நியூஸ் மீட்டர் (newsmeter.in) இணையதளத்தால் செய்யப்பட்டது மற்றும் சக்தி கூட்டுக்குழு (Shakti Collective) நமது இணைய பக்கத்துடன் பகிர்ந்து கொண்டது.
https://newsmeter.in/fact-check-tamil/french-president-didnt-shake-hands-with-narendra-modi-743634
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.