Advertisment

கிறிஸ்தவ பள்ளியில் இருந்து இந்து மாணவன் வெளியேற்றம்? உண்மை என்ன?

கிறிஸ்தவர்கள் மதவெறுப்புடன், சாமிக்கு மாலை அணிந்துள்ள இந்து சிறுவனை தங்களது பள்ளிக்குள் அனுமதிக்கவில்லை என்று சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் வீடியோவின் உண்மைத் தன்மையை நியூஸ் மீட்டர் இணையப் பக்கம் ஆய்வு செய்துள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Fact Check hindu  student removed from  christian school Tamil News

கிறிஸ்தவர்கள் மதவெறுப்புடன், சாமிக்கு மாலை அணிந்துள்ள இந்து சிறுவனை தங்களது பள்ளிக்குள் அனுமதிக்கவில்லை என்று குறிப்பிட்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மதவெறுப்புடன் வலதுசாரியினர் பரப்பும் பொய் பிரச்சாரம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே உள்ளது. சிறுபான்மையினர் இந்துக்கள் மீது மதவெறுப்புடன் நடந்து கொள்வதாக கூறி பல்வேறு தகவல்களை பரப்பி வருகின்றனர். இந்நிலையில், “பாவாடைகளின் அத்துமீறலை பாருங்கள். சரியான நேரத்தில் களமிறங்கிய பொதுமக்கள்” என்ற கேப்ஷனுடன் சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

Advertisment

அதில், செயின்ட் சாரிஸ் உயர்நிலைப் பள்ளி (St. Sary's High School) எனக் கிறிஸ்தவத்தைக் குறிக்கும் பெயர் தாங்கிய பள்ளிக்கு சாமிக்கு மாலை அணிந்துள்ள இந்து சிறுவன் பையுடன் செல்கிறான். பிறகு இரண்டு பெண்கள் அவனை பள்ளிக்கு வெளியே பிடித்து தள்ளுகின்றனர். தொடர்ந்து, அப்பகுதி மக்கள் மற்றும் காவல்துறையினர் உதவியுடன் அச்சிறுவன் பள்ளிக்கு செல்வது போன்ற காட்சி பதிவாகியுள்ளது. இதன் மூலம் கிறிஸ்தவ பள்ளி இந்து விரோதமாக நடந்து கொள்வதாக கூறி அந்த வீடியோவை சமூக வலைதள பக்கத்தில் பரப்பி வருகிறார்கள். 

இந்நிலையில், சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் அந்த வீடியோவின் உண்மைத் தன்மை குறித்து நியூஸ் மீட்டர் இணைய பக்கம் ஆய்வு செய்துள்ளது. இந்த உண்மைச் சரிபார்ப்பு நியூஸ் மீட்டர் (newsmeter.in) இணையதளத்தால் செய்யப்பட்டது மற்றும் சக்தி கூட்டுக்குழு (Shakti Collective) நமது இணைய பக்கத்துடன் பகிர்ந்து கொண்டது.

Advertisment
Advertisement

உண்மை சரிபார்ப்பு 

சமூக வலைதளத்தில் வைரலாக வீடியோவின் உண்மை தன்மையை கண்டறிய  அதனை முதலில் ஆய்வு செய்துள்ளனர். அப்போது,  அதன் ஒரு பகுதியில் “இந்த வீடியோ பொழுதுபோக்கிற்காக எடுக்கப்பட்டுள்ளது. இதில் வரும் கதாபாத்திரங்கள் அனைத்தும் பொழுதுபோக்கிற்காகவும் கல்வி நோக்கிலும் அமைக்கப்பட்டுள்ளது” என்று பொறுப்பு துறந்துள்ளனர்.

இதையடுத்து,  வீடியோவின் குறிப்பிட்ட பகுதியை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தபோது 3RD EYE என்ற யூடியூப் சேனலில் வைரலாகும் அதே வீடியோ கடந்த 28 ஆம் தேதி பதிவிடப்பட்டிருந்தது. அந்த வீடியோவின் டிஷ்கிரிப்ஷன் பகுதியில், “இப்பக்கத்தில் ஸ்கிரிப்ட் செய்யப்பட்ட நாடகங்கள், பகடிகள் மற்றும் விழிப்புணர்வு காணொலிகள் உள்ளன. இந்த குறும்படங்கள் பொழுதுபோக்கு மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே உருவாக்கப்பட்டுள்ளன.

வீடியோவில் சித்தரிக்கப்பட்ட அனைத்து கதாபாத்திரங்களும் சூழ்நிலைகளும் கற்பனையானவை மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், மகிழ்விக்கவும், கல்வி கற்பதையும் நோக்கமாகக் கொண்டவை. இந்த வீடியோ அனைத்து மதங்களையும் அவற்றின் நம்பிக்கைகளையும் மதிக்கிறது. இது கல்வி, விழிப்புணர்வு மற்றும் ஊக்கத்திற்காக உருவாக்கப்பட்டது. வீடியோவில் உள்ள கலைஞர்கள் யாருடைய நம்பிக்கையையும் புண்படுத்தவோ அல்லது அவமதிக்கவோ எந்த நோக்கமும் இல்லாமல், கதையை உயிர்ப்பிக்கும் பாத்திரங்களை சித்தரித்துள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இறுதியில், தேடலின் முடிவில், கிறிஸ்தவர்கள் மதவெறுப்புடன் சாமிக்கு மாலை அணிந்துள்ள இந்து சிறுவனை தங்களது பள்ளிக்குள் அனுமதிக்கவில்லை என்று சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் வீடியோ சித்தரிக்கப்பட்டது என்று ஆதாரப்பூர்வமாக நிரூபித்துள்ளனர். 

இந்த உண்மைச் சரிபார்ப்பு நியூஸ் மீட்டர் (newsmeter.in) இணையதளத்தால் செய்யப்பட்டது மற்றும் சக்தி கூட்டுக்குழு (Shakti Collective) நமது இணைய பக்கத்துடன் பகிர்ந்து கொண்டது.

https://newsmeter.in/fact-check-tamil/hindu-student-removed-from-christian-school-742051

Viral Social Media Viral Viral Video Fact Check
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment