கை, கால்களில் விலங்கு; அமெரிக்காவில் இருந்து வெளியேற்றப்பட்ட இந்தியர்கள்: வைரலாகும் வீடியோ; உண்மை என்ன?

அமெரிக்காவில் இருந்து நாடுகடத்தப்பட்ட இந்தியர்களின் கை, கால்களில் விலங்கிடப்பட்டு அவமானப்படுத்தப்பட்டதாக சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்று வைரலாகி வரும், அதன் உண்மைத் தன்மை குறித்து நியூஸ் மீட்டர் இணையப் பக்கம் சார்பில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் இருந்து நாடுகடத்தப்பட்ட இந்தியர்களின் கை, கால்களில் விலங்கிடப்பட்டு அவமானப்படுத்தப்பட்டதாக சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்று வைரலாகி வரும், அதன் உண்மைத் தன்மை குறித்து நியூஸ் மீட்டர் இணையப் பக்கம் சார்பில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
Fact Check indians deported after handcuffed in USA viral video Tamil News

அமெரிக்காவில் இருந்து நாடுகடத்தப்பட்ட இந்தியர்களின் கை, கால்களில் விலங்கிடப்பட்டு அவமானப்படுத்தப்பட்டதாக சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

அமெரிக்காவில் இருந்து நாடுகடத்தப்பட்ட இந்தியர்களின் கை, கால்களில் விலங்கிடப்பட்டு அவமானப்படுத்தப்பட்டதாக சமூக வலைதளத்தில்  வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அந்த வீடியோவின் உண்மைத் தன்மை குறித்து நியூஸ் மீட்டர் இணையப் பக்கம் சார்பில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இந்த உண்மைச் சரிபார்ப்பு நியூஸ் மீட்டர் (newsmeter.in) இணையதளத்தால் செய்யப்பட்டது மற்றும் சக்தி கூட்டுக்குழு (Shakti Collective) நமது இணைய பக்கத்துடன் பகிர்ந்து கொண்டது.

Advertisment

அமெரிக்காவின் அதிபராக 2-வது முறையாக பதவியேற்ற டொனால்ட் டிரம்ப் சட்டவிரோதமாக குடியேறியுள்ள வெளிநாட்டினரை அவர்களது சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்பி வருகிறார். இதனையடுத்து, அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்களில் முதல்கட்டமாக 205 பேரை நேற்று முன்தினம் 
புதன்கிழமை (பிப்ரவரி 5) ராணுவ விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டனர். 

இந்நிலையில், “இந்தியாவை இதை விட வேறு எந்த நாடும் கேவலப்படுத்த முடியாது. சட்டவிரோத இந்திய குடியேற்றிகளை கைவிலங்கிட்டு தீவிரவாதிகளை போல் நடத்தும் டிரம்பின் இந்த நடைமுறை ஒட்டு மொத்த இந்தியர்களுக்கே தலைகுனிவு.” என்ற கேப்சனுடன் சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், சிலர் விலங்கிடப்பட்டு ராணுவ விமானங்களில் ஏற்றப்படும் காட்சி இடம் பெற்றுள்ளது. அவர்கள் இந்தியர்கள் தான் என்று கூறி பரப்பி வருகின்றனர்.

Advertisment
Advertisements

இந்த நிலையில், சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வரும் அந்த வீடியோவின் உண்மைத் தன்மை குறித்து நியூஸ் மீட்டர் இணையப் பக்கம் சார்பில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இந்த உண்மைச் சரிபார்ப்பு நியூஸ் மீட்டர் (newsmeter.in) இணையதளத்தால் செய்யப்பட்டது மற்றும் சக்தி கூட்டுக்குழு (Shakti Collective) நமது இணைய பக்கத்துடன் பகிர்ந்து கொண்டது.

உண்மைச் சரிபார்ப்பு 

சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வரும் அந்த வீடியோவின் உண்மைத் தன்மையை கண்டறிய அதன் குறிப்பிட்ட பகுதியை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்துள்ளனர். அப்போது, வைரலாகும் அதே வீடியோ ஏ.என்.சி 24/7 என்ற ஊடகத்தில் கடந்த ஜனவரி 28 ஆம் தேதி வெளியிடப்பட்டிருந்தது. இதன் மூலம் அந்த வீடியோ பழைய வீடியோ என்று தெரியவந்தது.

மேலும், கிடைத்த தகவலைக் கொண்டு தொடர்ந்து தேடிப் பார்த்துள்ளனர். அப்போது, கடந்த ஜனவரி 24 ஆம் தேதி நியூயார்க் போஸ்ட் இதுதொடர்பாக செய்தி வெளியிட்டிருந்தது‌. அதன்படி, இரண்டு C-17 குளோப்மாஸ்டர் III விமானங்கள் குவாத்தமாலாவிற்கு புலம்பெயர்ந்தோரை ஏற்றிச் சென்றதாக பாதுகாப்பு அதிகாரிகள் ஏ.பி.சி ஊடகத்திடம் தெரிவித்துள்ளனர். என்.பி.சி ஊடகத்தின் படி, 31 பெண்கள் மற்றும் 48 ஆண்கள் உட்பட 79 குவாத்தமாலா மக்கள் நாடு திரும்பியதாக குவாத்தமாலா இடம்பெயர்வு நிறுவனம் அறிக்கையில் உறுதிப்படுத்தியுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இவற்றை உறுதிப்படுத்தும் விதமாக வெள்ளை மாளிகையின் ஊடக செயலர் கரோலின் லீவிட், சட்டவிரோதமாக அமெரிக்காவிற்குள் நுழைந்தால், கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று கடந்த ஜனவரி 24 ஆம் தேதி எக்ஸ் தளத்தில் புகைப்படத்துடன் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதிலுள்ள நபரின் ஆடையும் வைரலாகும் வீடியோவில் இருக்கும் நபரின் ஆடையும் ஒன்றாக இருப்பதை கண்டறிந்துள்ளனர்.  

இறுதியாக, நியூஸ் மீட்டர் தேடலின் முடிவில், கைவிலங்கிடப்பட்டு அமெரிக்காவில் இருந்து இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்ட சட்ட விரோதமாக குடியேரிய இந்தியர்கள் என்று வைரலாகும் வீடியோவில் இருப்பது குவாத்தமாலாவைச் சேர்ந்த சட்டவிரோத குடியேறிரிகள் என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

இந்த உண்மைச் சரிபார்ப்பு நியூஸ் மீட்டர் (newsmeter.in) இணையதளத்தால் செய்யப்பட்டது மற்றும் சக்தி கூட்டுக்குழு (Shakti Collective) நமது இணைய பக்கத்துடன் பகிர்ந்து கொண்டது.

https://newsmeter.in/fact-check-tamil/indians-deported-after-handcuffed-in-usa-743317

 

Viral Video Fact Check Social Media Viral Viral Viral News

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: