Advertisment

மகா கும்பமேளாவில் பங்கேற்ற ஸ்டீவ் ஜாப்ஸ் மனைவி? வைரலாகும் வீடியோ: உண்மை என்ன?

உத்தர பிரதேச மாநிலத்தில் நடைபெறும் மகா கும்பமேளாவில் பங்கேற்ற ஸ்டீவ் ஜாப்ஸ் மனைவி என்று குறிப்பிட்ட வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் நிலையில், அதன் உணமைத் தன்மையை தெலுங்கு போஸ்ட் சார்பில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Fact Check Mahakumbh Mela Steve Jobs wife Laurene Powell viral video Tamil News

உத்தர பிரதேச மாநிலத்தில் நடைபெறும் மகா கும்பமேளாவில் பங்கேற்ற ஸ்டீவ் ஜாப்ஸ் மனைவி என்று குறிப்பிட்ட வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி  வரும் நிலையில், அதன் உணமைத் தன்மையை தெலுங்கு போஸ்ட்  சார்பில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இந்த உண்மைச் சரிபார்ப்பு தெலுங்கு போஸ்ட்  (Telugu Post.com) இணையதளத்தால் செய்யப்பட்டது மற்றும் சக்தி கூட்டுக்குழு (Shakti Collective) நமது இணைய பக்கத்துடன் பகிர்ந்து கொண்டது.

Advertisment

உத்தர பிரதேசத்தில் 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மகா கும்பமேளா நிகழ்ச்சி கடந்த 13 ஆம் தேதி தொடங்கியது. பிப்ரவரி 26 தேதி வரை மகா கும்பமேளா நடைபெற உள்ளது. இதையொட்டி, உலகம் முழுவதும் இருந்து கோடிக்கணக்கான பக்தர்கள் பிரயாக்ராஜில் திரண்டு அங்குள்ள திரிவேணி சங்கமத்தில்  அமாவாசையையொட்டி புனித நீராடினர்.

இந்நிலையில்,  இந்த மகா கும்பமேளாவில் கலந்து கொள்வதற்காக ஸ்டீவ் ஜாப்ஸ் மனைவி லாரென் பாவெல் (61) இந்தியாவிற்கு வருகை தந்துள்ளார். ஆப்பிள் நிறுவனத்தின் இணை நிறுவனரும், பிரபல தொழிலதிபருமான ஸ்டீவ் ஜாப்ஸ் (56) கடந்த 2011 ஆம் ஆண்டு உயிரிழந்தார். அவரது மனைவி லாரென் பாவெல், ஆன்மிகத்தில் அதிக நாட்டம் கொண்டவராக இருந்து வருகிறார்.

இந்நிலையில், லாரென் பாவெல் பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளாவில் கலந்துகொண்டு திரிவேணி சங்கமத்தின் தீர்த்தவாரியில் புனித நீராட திட்டமிட்டிருந்தார். ஆனால், அவர் ஒவ்வாமை பாதிப்பு இருந்ததால் புனித நீராடவில்லை என செய்திகள் வெளியானது.

Advertisment
Advertisement

அதேநேரத்தில், வெளிநாட்டு பெண்மணி ஒருவரின் வீடியோ சமூக வலைதளங்களில் அதிகமாகப் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. அதில், “ ‘கும்ப மேளாவில் உலக புகழ்பெற்ற ஆப்பிள் போன் நிறுவனரின் மனைவி ஸ்டீவ் ஜாப்ஸ் (𝗦𝘁𝗲𝘃𝗲 𝗝𝗼𝗯𝘀)’ என்று பா.ஜ.க-வைச் சேர்ந்த ராஜா நாகர்கோவில் என்பவரின் முகநூல் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

உண்மைச் சரிபார்ப்பு:

இந்நிலையில், சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவின் உண்மைத் தன்மை குறித்து தெலுங்கு போஸ்ட்  இணையப் பக்கம் சார்பில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இந்த உண்மைச் சரிபார்ப்பு தெலுங்கு போஸ்ட்  (Telugu Post.com) இணையதளத்தால் செய்யப்பட்டது மற்றும் சக்தி கூட்டுக்குழு (Shakti Collective) நமது இணைய பக்கத்துடன் பகிர்ந்து கொண்டது.

 உலகப் பணக்காரர்களின் ஒருவரான லாரென் பாவெல், இந்தியா வந்திருந்தால் செய்தி நிறுவனங்கள் அதை பதிவு செய்திருக்கும். அதனால், இது தொடர்பான செய்திகள் ஏதும் வெளியாகியுள்ளதா என்பதை கூகுள் சர்ச் வாயிலாக சோதனை செய்து பார்த்துள்ளனர். அப்போது, என்.டி.டி.வி இணையப் பக்கத்தில், “ஆப்பிள் நிறுவனர் மனைவி லாரென் பாவெல் ஜாப்ஸ், மகா கும்பமேளா 2025-இல் தான் கலந்துகொள்ள விரும்புகிறேன்,” என்று கூறியதாக செய்தி பதிவாகியுள்ளது. மேலும், "சுவாமி கைலாசானந்த் கிரி அவருக்கு "கமலா" என்ற இந்து பெயரைக் கொடுத்தார். லாரென் பாவெல் ஆன்மீக நடைமுறைகளை ஏற்றுக்கொண்டார்," என்று ஒரு செய்தி வெளியிடப்பட்டிருந்தது.

மேலும், ஜனவரி 13, 2025 அன்று இந்தியா டுடே பத்திரிக்கையாளர் ஐஸ்வர்யா பாலிவால் எக்ஸ் தளப் பதிவில், காவி நிற உடையுடன், மறைந்த ஆப்பில் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் மனைவி லாரென் பாவெல் ஜாப்ஸ் பிரக்யராஜில் மகா கும்பமேளாவில் உள்ளார் என்ற பதிவுடன் வீடியோ ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் லாரென் பாவெல்  தெளிவானப் புகைப்படங்களை தேடிப் பார்த்துள்ளனர். அப்போது நியூயார்க் டைம்ஸ் இணைய பக்கத்தில், உலகின் 35-வது பணக்காரர் ஸ்டீவ் ஜாப்ஸ் மனைவி எனும் கட்டுரை வெளியாகி இருந்தது. தற்போது, பரப்படும் வீடியோவில் இருப்பது ஸ்டீவ் 
ஜாப்ஸ் மனைவி அல்ல என்பது உறுதி செய்துள்ளனர். எனினும், அந்த வீடியோவில் இருப்பவர் யார் என்பதை கண்டறிய மேலும் தேடலில் ஈடுபட்டுள்ளனர். 

அதற்காக, பகிரப்படும் வீடியோவில் இருக்கும் இன்ஸ்டாகிராமில் உள்ள ‘@Sadhviji’ எனும் கணக்கை தணிக்கைக்கு உட்படுத்தியுள்ளனர். மெட்டா தளத்தில் இந்த பெயரில் இருக்கும் கணக்கைத் தேடும்போது, அது ‘சாத்வி பகவதி சரஸ்வதி’ (Sadhvi Bhagawati Saraswati) என்ற புரொஃபைல் பெயரில் இருந்துள்ளது.
பின்னர், கிடைத்த பெயரை வைத்து கூகுளில் தேடி பார்த்தபோது, ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் இவரைக் குறித்த ஒரு செய்தியை வெளியிட்டிருந்தது. அதில், பிரயாக்ராஜில் நடந்த பரமார்த் நிகேதன் கும்பமேளா முகாமில் சாத்வி பகவதி சரஸ்வதி பூஜைகள் செய்தார் என்று கூறப்பட்டிருந்தது.

ஏ.என்.ஐ செய்தி  நிறுவனத்தின் எக்ஸ் தள பதிவுகளைத் சோதனை செய்துள்ளனர். அப்போது, அவர் அந்த செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்துள்ளார். அது தொடர்பாக ஏ.என்.ஐ பதிவில், “சாத்வி பகவதி சரஸ்வதி முதலில் லாஸ் ஏஞ்சல்ஸைச் சேர்ந்தவர் மற்றும் ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர். அவர் ரிஷிகேஷில் உள்ள பரமார்த்த நிகேதனில் சுமார் 30 ஆண்டுகளாக வசித்து வருகிறார்,” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து, அவரது இன்ஸ்டாகிராம் கணக்கை சோதனை செய்துள்ளனர் அப்போது, பரவிவரும் வீடியோ ‘மகா சங்கிராந்தி’ விழா அன்று எடுக்கப்பட்டதை கண்டறிந்துள்ளனர். 

அந்த வீடியோவில், “மகர சங்கராந்தி வாழ்த்துக்கள்! இன்று சூரியன் வடக்கு அரைக்கோளத்தில் நகரும் நாள்; அதாவது நாம் ஒளியை நோக்கி திரும்புகிறோம் என்று அர்த்தம்! மா கங்கா, மா யமுனை மற்றும் சரஸ்வதி நதிகள் சங்கமிக்கும் சங்கமத்தில் புனித நீராடி, மகா கும்பமேளாவில் இந்த நாளைக் கொண்டாடுவது எவ்வளவு புனிதமான வாய்ப்பு,” என்று அவர் குறிப்பிட்டுள்ளார். 

இறுதியில், தெலுங்கு போஸ்ட் தேடலில் முடிவில், ஊடக தரவுகளை வைத்து, ஸ்டீவ் ஜாப்ஸ் மனைவி லாரென் பாவெல் ஜாப்ஸ் கும்பமேளாவில் கலந்துகொள்ள திட்டமிட்டு இருந்தார் எனவும், ஆனால் வைரல் வீடியோவில் காட்டப்படும் பெண் சாத்வி பகவதி சரஸ்வதி என்றும் உறுதி செய்துள்ளனர். எனவே, இது தவறாகப் பகிரப்படும் வீடியோ என்றும் நிரூபித்துள்ளனர்.  

இந்த உண்மைச் சரிபார்ப்பு தெலுங்கு போஸ்ட்  (Telugu Post.com) இணையதளத்தால் செய்யப்பட்டது மற்றும் சக்தி கூட்டுக்குழு (Shakti Collective) நமது இணைய பக்கத்துடன் பகிர்ந்து கொண்டது.

https://www.telugupost.com/tamil-factcheck/viral-video-showing-a-woman-taking-holy-dip-in-kumbh-mela-is-not-steve-jobs-wife-1566161

Viral Social Media Viral Viral Video Viral News Fact Check
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment