தமிழ்நாட்டின் குலசேகரப்பட்டினம் (குலசை) கடற்கரையில் புயல் ஏற்பட்டதாக குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இந்த வீடியோவின் உண்மைத் தன்மை குறித்து நியூஸ் மீட்டர் இணைய பக்கம் சார்பில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இந்த உண்மைச் சரிபார்ப்பு நியூஸ் மீட்டர் (newsmeter.in) இணையதளத்தால் செய்யப்பட்டது மற்றும் சக்தி கூட்டுக்குழு (Shakti Collective) நமது இணைய பக்கத்துடன் பகிர்ந்து கொண்டது.
வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது மேலும் வலுவடைந்து மேற்கு - வடமேற்கு திசையில் தமிழகம் நோக்கி நகரும். தமிழக கடற்கரையை நோக்கி அடுத்த 2 நாட்களில் நகரக் கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன்காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் இன்று முதல் 21 வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை தொடங்கி புதுக்கோட்டை வரை உள்ள கடலோர மாவட்டங்கள் மற்றும் அதையொட்டியுள்ள மாவட்டங்களிலும், டெல்டாவிலும் 17,18-ஆகிய தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தமிழ்நாட்டின் குலசேகரப்பட்டினம் (குலசை) கடற்கரையில் புயல் ஏற்பட்டதாக குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இந்த வீடியோவின் உண்மைத் தன்மை குறித்து நியூஸ் மீட்டர் இணைய பக்கம் சார்பில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது.
உண்மை சரிபார்ப்பு
சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில், "குலசை கடற்கரையில் ஏற்பட்ட புயல்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், அந்த வீடியோ 13 டிசம்பர் 3034-ல் எடுக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. இதனை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பயனர் பகிர்ந்துள்ளார்.
அந்த வீடியோவின் முக்கியமான ப்ரேம்களை ரிவர்ஸ் இமேஜ் தேடலை பயன்டுத்தி தேடியுள்ளனர். அப்போது, அக்டோபர் 21, 2022 அன்று யு.எஸ்.ஏ டுடே சேனல் அந்த வீடியோவை வெளியிட்டு இருக்கிறது. அதில், ‘சைப்ரஸ் கடற்கரையில் மேல் நோக்கி உறிஞ்சப்படும் நீரின் கண்கவர் காட்சி’ என்ற தலைப்பிடப்பட்டு இருப்பதை கண்டறிந்துள்ளனர்.
இதன் மூலம் சைப்ரஸில் உள்ள அயியா நாபா கடற்கரையில் நீர் உறிஞ்சுதல் நிகழ்வு நடந்தது. இந்த நிகழ்வின் போது கடற்கரை பகுதியில் இருந்த யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. அப்பகுதியில் இருந்த சேர்கள் மட்டும் தூக்கி வீசப்பட்டுள்ளது
யூடியூப் சேனலான ஃபாக்ஸ் வெதர், அக்டோபர் 18, 2022 அன்று, ‘மாசிவ் வாட்டர்ஸ்பவுட் ஸ்விர்ல்ஸ் ஆன்டு சைப்ரஸ் பீச்’ என்ற வீடியோவை பகிர்ந்து இருப்பதையும் கண்டறிந்துள்ளனர். மேலும், நீர் உறிஞ்சுதல் நிகழ்வு கடற்கரையை நோக்கிச் சென்றது, ஆனால் எந்த காயமும் ஏற்படவில்லை என்றும் அந்தச் சேனல் தெரிவித்துள்ளது.
இதேபோல், அக்டோபர் 17, 2022 அன்று நீர் உறிஞ்சுதல் நிகழ்வு ஏற்பட்டதாகக் கூறி ஃபாக்ஸ் வெதர் செய்தி நிறுவனம் அதன் இன்ஸ்டாகிராமில் அந்த வீடியோவை வெளியிட்டுள்ளது. உள்ளூர் போலீசார் எந்த சேதமும் இல்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளனர். தொடர்ந்து, ஃபாக்ஸ் வெதர் செய்தி நிறுவனம் நவம்பர் 8, 2022 அன்று வெளியிட்ட மற்றொரு வீடியோ பதிவில், இது ‘டொர்னாடிக் வாட்டர்ஸ்பவுட் மேக்ஸ் இட்ஸ் வே டு ஷோர் இன் சைப்ரஸ்’ என்று குறிப்பிட்டுள்ளது.
இறுதியில், நியூஸ் மீட்டர் தேடல் முடிவில், தமிழ்நாட்டின் குலசேகரப்பட்டினம் (குலசை) கடற்கரையில் புயல் ஏற்பட்டதாக குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் அந்த வீடியோ, 2022 ஆம் ஆண்டு சைப்ரஸில் எடுக்கப்பட்டது என்று நிரூபித்துள்ளது. எனவே, இந்த தவறான தகவலுடன் இருக்கும் அந்த வீடியோவை யாரும் பகிர வேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இந்த உண்மைச் சரிபார்ப்பு நியூஸ் மீட்டர் (newsmeter.in) இணையதளத்தால் செய்யப்பட்டது மற்றும் சக்தி கூட்டுக்குழு (Shakti Collective) நமது இணைய பக்கத்துடன் பகிர்ந்து கொண்டது.
https://newsmeter.in/fact-check/massive-waterspout-spotted-at-tamil-nadus-kulasai-beach-no-video-is-from-ayia-napa-beach-in-cyprus-740635?infinitescroll=1
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.