/indian-express-tamil/media/media_files/2025/01/30/e4xkV1xVzSIJT3HgHaMU.jpg)
திப்பு சுல்தானின் பெரிய கட்-அவுட்டுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டதாக சமூக வலைதளத்தில் பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. அதன் உண்மைத் தன்மை குறித்து தெலுங்கு போஸ்ட் இணையப் பக்கம் சார்பில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது.
திப்பு சுல்தானின் பெரிய கட்-அவுட்டுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டதாக சமூக வலைதளத்தில் பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. அதன் உண்மைத் தன்மை குறித்து தெலுங்கு போஸ்ட் இணையப் பக்கம் சார்பில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இந்த உண்மைச் சரிபார்ப்பு தெலுங்கு போஸ்ட் (Telugu Post.com) இணையதளத்தால் செய்யப்பட்டது மற்றும் சக்தி கூட்டுக்குழு (Shakti Collective) நமது இணைய பக்கத்துடன் பகிர்ந்து கொண்டது.
மும்பை உயர் நீதிமன்றத்தில் கடந்த மாதம் புனே கிராமப்புற காவல்துறைக்கு 18 ஆம் நூற்றாண்டு மைசூர் ஆட்சியாளர் திப்பு சுல்தான் பிறந்த நாளுக்கான நிகழ்ச்சியை தடை செய்வதற்கான மீளாய்வு உத்தரவு பிறப்பித்தது. அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் கட்சியின் புனே பிரிவு தலைவர் பயாஸ் ஷேக், காவல்துறை பேரணிக்கு அனுமதி மறுத்ததை எதிர்த்து உயர் நீதிமன்றத்தை அணுகியிருந்தார்.
புனே காவல்துறை இந்த பேரணிக்கு அனுமதி மறுத்தது, இது சட்டம்-ஒழுங்கு பிரச்னைகளுக்கு வழிவகுக்கும் என்று கூறியது. ஆனால், நீதிபதிகள் ரெவதி மோகிதே டெரே மற்றும் எஸ்.ஜி. டிகே ஆகியோர் அடங்கிய அமர்வு, “சட்டம்-ஒழுங்கு பிரச்னை என்பது பேரணிக்கு அனுமதி மறுக்கும் காரணமாக இருக்க முடியாது” என்று தெளிவுபடுத்தியது.
இந்நிலையில், சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வரும் பதிவில், 'பெங்களூரு காவல்துறை, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் கடவுளாகப் போற்றப்படும் ராமரின் உருவப்படங்களை பாதையில் நிறுவியதற்காக கோவிலின் நிர்வாகத்தினரை எதிர்த்து வழக்குப் பதிவு செய்ததை கேள்வி எழுப்பியது. ஆனால், இஸ்லாமிய சமூகத்தினர் திப்பு சுல்தான் உருவப்படங்களை நிறுவியதற்காக ஏன் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்படவில்லை' எனக் கேள்வி எழுப்பப்பட்டது.
உண்மைச் சரிபார்ப்பு:
இந்நிலையில், சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் அந்தப் பதிவின் உணமைத் தன்மை குறித்து தெலுங்கு போஸ்ட் இணையப் பக்கம் சார்பில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இந்த உண்மைச் சரிபார்ப்பு தெலுங்கு போஸ்ட் (Telugu Post.com) இணையதளத்தால் செய்யப்பட்டது மற்றும் சக்தி கூட்டுக்குழு (Shakti Collective) நமது இணைய பக்கத்துடன் பகிர்ந்து கொண்டது.
தெலுங்கு போஸ்ட் சார்பில் மேற்கொண்ட ஆய்வில், முகலாயப் பேரரசர் ஔரங்கசீப்பின் உருவமும் இருப்பதால் வைரலான படம் திப்பு ஜெயந்தியுடன் (திப்பு சுல்தானின் பிறந்தநாள் விழா) தொடர்புடையதாகத் தெரியவில்லை என்று கண்டறிந்துள்ளனர். இதையடுத்து, கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடல் கருவி மூலம் அந்த புகைப்படம் தணிக்கை உட்படுத்தியுள்ளனர்.
Here is thread of #Shimoga violence.
— Chakravarty Sulibele (@astitvam) October 2, 2023
It all started with a Tipu cut out in which he kills two saffron coloured people. Police understood the depth of the problem and painted them white.
Muslims went on rage and women started protesting and blocking the roads of Honnali-shimoga.… pic.twitter.com/TQQOHTknOa
அதில் இரண்டு படங்களில் ஒன்றைக் கொண்ட நியூஸ்18 கன்னட செய்திக் கட்டுரையைக் கண்டறிந்துள்ளனர். நியூஸ் 18 கன்னட செய்தித் தளத்தின்படி, சிவமோக்கா நகரில் உள்ளூர் இஸ்லாமிய சமூகம் ஈத் மிலாத் உன் நபி (முஹம்மது நபியின் பிறந்தநாள்) விழாவை மிகப் பெரிய அளவில் கொண்டாடிய புகைப்படங்களை கண்டறிந்துள்ளனர். நகரம் முழுவதும் பச்சை வண்ணம் பூசப்பட்டுள்ளது என்று அந்த செய்தியில் கூறப்பட்டிருந்தது. அதில், முன்னாள் மைசூர் ஆட்சியாளர் திப்பு சுல்தானின் பெரிய கட்அவுட்களும், அவுரங்கசீப்பின் ஆட்சியின் போது பிரிக்கப்படாத இந்தியாவின் வரைபடத்தின் கட்அவுட்டும் இடம்பெற்றிருந்தன. இதைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட சோதனையில், இந்த பேரணியில் கல் வீச்சு சம்பவங்கள் நடந்ததாகவும், வன்முறை நடந்ததாகவும் அரசியல் ஆர்வலர் சக்ரவர்த்தி சுலிபெலேவின் தொடர்ச்சியான எக்ஸ் தளப் பதிவுகள் தெரிவித்தன.
டெக்கான் ஹெரால்டு செய்தி தளத்தில் குறிப்பிட்டுள்ளபடி, சிவமோகா காவல் கண்காணிப்பாளர் ஜி.கே. மிதுன் குமார், நகரின் தலைமை இடமான ராகி குட்டா பகுதியில் மத ஊர்வலத்தின் போது கல் வீசப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து சிறிது நேரம் பதற்றம் நிலவியது என்று தெரிவித்துள்ளார். ராகி குட்டா சம்பவம் தொடர்பாக 24 வழக்குகள் பதிவு செய்து 60 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல் கண்காணிப்பாளர் குமார் கூறியதாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. ராகி குட்டா பகுதியில் தற்போது அமைதியான சூழல் நிலவுவதால், சிவமோகா நகரில் எந்த பாதிப்பும் இல்லை என அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
இதனையடுத்து, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ராமர் கட்அவுட்டை அமைத்ததற்காக கோயில் அலுவலர்கள் மீது பெங்களூரு காவல்துறையால் வழக்குப் பதிவு செய்யப்பட்டதாக பரப்படும் பதிவு குறித்து தேடலில் ஈடுபட்டுள்ளனர். ஸ்கிரீன்ஷாட்டில் காட்டப்பட்டுள்ள டைம்ஸ் நவ் செய்திக் கட்டுரையில், ராஜாஜிநகர் காவல்துறையினர் “Karnataka Open Place Disfigurement சட்டம் 1951 & 1981 இன் பிரிவு 3 இன் கீழ் ஸ்ரீ அன்னபூர்ணேஸ்வரி கோயில் அறக்கட்டளை மற்றும் சிவநகரா யுவகரா வேதிகே மீது முறையான அனுமதி இன்றி சாலையோரத்தில் கட்-அவுட்டைப் போட்டதற்காக வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
அதில் முக்கியமாக, 30x40 அடி கட்-அவுட்டை காட்சிப்படுத்துவது, 2017ஆம் ஆண்டு கர்நாடகா உயர் நீதிமன்ற உத்தரவை மீறுவதாகக் கூறி உள்ளூர்வாசியான சுப்ரமணி என்பவர் காவல்துறையினரிடத்தில் புகார் அளித்ததை அடுத்து, நகரில் முறையான அனுமதியின்றி ஃப்ளெக்ஸ்கள் மற்றும் போர்டுகளை வைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. உரிய அலுவலர்களிடம் இருந்து அனுமதி பெற்றதாக கோயில் நிர்வாகிகள் தெரிவித்த நிலையில், மக்களுக்கு உணவளிக்க மேடை அமைப்பதற்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், பெரிய பேனர்கள் மற்றும் கட்-அவுட்டுகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பொதுவாக மிலாடி நபி ஊர்வலம் அல்லது வேறு எந்த ஊர்வலத்திற்கும் காவல்துறை அனுமதி தேவை. எனவே, பிரதமர் மோடி மற்றும் ராமர் கட்அவுட் வழக்கில் சிவமோகா காவல்துறை வழக்குப் பதிவு செய்யவில்லை என்று பெங்களூரு காவல்துறையினர் தெளிவுபடுத்தியுள்ளனர். சாலையில் வைக்கப்பட்ட பெரிய கட்-அவுட்டுக்கு எதிராகவே காவல்துறை அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்துள்ளனர் என்பதைக் கண்டறிந்துள்ளனர். எனவே, எக்ஸ் தளத்தில் பகிரப்பட்டு வரும் பதிவில் கூறப்படும் கூற்று தவறானது என்றும் நிரூபித்துள்ளனர்.
இந்த உண்மைச் சரிபார்ப்பு தெலுங்கு போஸ்ட் (Telugu Post.com) இணையதளத்தால் செய்யப்பட்டது மற்றும் சக்தி கூட்டுக்குழு (Shakti Collective) நமது இணைய பக்கத்துடன் பகிர்ந்து கொண்டது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.