முருகனுக்கு காவடி எடுத்துச் சென்ற நெல்லை முன்னாள் மேயர் கைது? வைரலாகும் வீடியோ; உண்மை என்ன?

முருகனுக்கு காவடி எடுத்துச் சென்றதற்காக கைது செய்யப்பட்ட நெல்லை முன்னாள் மேயர் எனக் குறிப்பிட்ட சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் வீடியோவின் உண்மைத் தன்மை குறித்து நியூஸ் மீட்டர் இணையப் பக்கம் சார்பில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Fact Check Tirunelveli former mayor bhuvaneswari arrested for taking kavadi viral video Tamil News

முருகனுக்கு காவடி எடுத்துச் சென்றதற்காக கைது செய்யப்பட்ட நெல்லை முன்னாள் மேயர் எனக் குறிப்பிட்ட சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் வீடியோவின் உண்மைத் தன்மை குறித்து நியூஸ் மீட்டர் இணையப் பக்கம் சார்பில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது.

முருகனுக்கு காவடி எடுத்துச் சென்றதற்காக கைது செய்யப்பட்ட நெல்லை முன்னாள் மேயர் எனக் குறிப்பிட்ட சமூக வலைதளத்தில் வைரலாகி  வரும் வீடியோவின் உண்மைத் தன்மை குறித்து நியூஸ் மீட்டர் இணையப் பக்கம் சார்பில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இந்த உண்மைச் சரிபார்ப்பு நியூஸ் மீட்டர் (newsmeter.in) இணையதளத்தால் செய்யப்பட்டது மற்றும் சக்தி கூட்டுக்குழு (Shakti Collective) நமது இணைய பக்கத்துடன் பகிர்ந்து கொண்டது.

Advertisment

திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக பா.ஜ.க மற்றும் வலதுசாரியினர் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். மலையின் மீது இருக்கும் சிக்கந்தர் தர்காவில் ஆடு, கோழிகள் பலியிடப்படுவதால், அங்குள்ள முருகன் கோயிலின் புனிதத் தன்மை பாதிக்கப்படுகிறது என்று கூறி வந்தனர். தொடர்ந்து, திருப்பரங்குன்றம் மலையை மீட்டெடுப்போம் என்று பா.ஜ.க, இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி என பல்வேறு அமைப்பினர் இணைந்து திருப்பரங்குன்றத்தில் பிப்ரவரி 4 ஆம் தேதியும், மதுரை பழங்காநத்தத்தில் பிப்ரவரி 5 ஆம் தேதி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், “தி.மு.க-வின் பாதுகாப்பு காவலராக (Security Guard) மாறிப்போன தமிழக போலீசின் பரிதாப நிலை. நெல்லையில் முருகனுக்கு காவடி எடுத்து வந்த முன்னாள் மேயர் புவனேஸ்வரி கைது…!” என்கிற கேப்சனுடன் சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதில், திருநெல்வேலியின் முன்னாள் அ.தி.மு.க மேயர் புவனேஸ்வரி காவடியுடன் கைது செய்யப்படும் காட்சி பதிவாகியுள்ளது. முன்னாள் மேயர் புவனேஸ்வரி முருகனுக்கு காவடி எடுக்கும்போது அதனை தடுக்கும் விதமாக காவல்துறையினர் கைது செய்வதாகக் குறிப்பிட்டு இதனை பரப்பி வருகின்றனர்.

Advertisment
Advertisements

இந்நிலையில், முருகனுக்கு காவடி எடுத்துச் சென்றதற்காக கைது செய்யப்பட்ட நெல்லை முன்னாள் மேயர் எனக் குறிப்பிட்ட சமூக வலைதளத்தில் வைரலாகி  வரும் வீடியோவின் உண்மைத் தன்மை குறித்து நியூஸ் மீட்டர் இணையப் பக்கம் சார்பில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இந்த உண்மைச் சரிபார்ப்பு நியூஸ் மீட்டர் (newsmeter.in) இணையதளத்தால் செய்யப்பட்டது மற்றும் சக்தி கூட்டுக்குழு (Shakti Collective) நமது இணைய பக்கத்துடன் பகிர்ந்து கொண்டது.

உண்மை சரிபார்ப்பு 

நியூஸ் மீட்டரின் ஆய்வில் புவனேஸ்வரி மதுரை திருப்பரங்குன்றத்தில் நடைபெற இருந்த போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக சென்றபோது காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார் என்பது தெரிய வந்தது. வைரலாகும் இத்தகவல் உண்மைதானா என்பதை கண்டறிய இது தொடர்பாக கூகுளில் கீவர்ட் சர்ச் செய்து பார்த்துள்ளனர். அப்போது, கடந்த பிப்ரவரி 4 ஆம் தேதி தி இந்து இது தொடர்பான செய்தியை வெளியிட்டிருந்தது. 

அதில், “திருப்பரங்குன்றத்தில் செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 4) நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க மதுரைக்கு செல்ல முயன்ற இந்து முன்னணி மற்றும் பிற இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், திருநெல்வேலி ரயில் நிலையத்திற்கு காவடியுடன் சென்ற முன்னாள் மேயர் புவனேஸ்வரியை, அங்குள்ள காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். திருச்செந்தூருக்கு விசேஷ பூஜை செய்யப் போவதாக அவர் காவல்துறையினரிடம் கூறியபோதும், புவனேஸ்வரியை கைது செய்து தனியார் திருமண மண்டபத்திற்கு அழைத்துச் சென்று மாலையில் விடுவித்தனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அவரை கைது செய்தபின் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியை பாலிமர் ஊடகம் வெளியிட்டிருந்தது. அதில், “இந்துக்களை ஒடுக்கும் தி.மு.க அரசை வன்மையாக கண்டிக்கிறோம். திருப்பரங்குன்றம் மலை எங்களுடைய மலை முருகனின் மலை, இந்துக்களே. இன்று மழைக்குப் போகக்கூடாது என்று கூறுபவர்கள், நாளை உங்களை வீதியில் செல்லக்கூடாது என்று கூறுவார்கள்” என்கிறார். இதன் மூலம் அவர் திருப்பரங்குன்றம் சர்ச்சையைத் தொடர்ந்தே காவடி எடுத்துள்ளார் என்பதைக் கண்டறிந்துள்ளனர்.  

இவற்றை உறுதிப்படுத்தும் விதமாக, “திருப்பரங்குன்றத்திற்கு காவடி எடுத்துச் சென்ற முன்னாள் அ.தி.மு.க மேயர் புவனேஸ்வரி நெல்லை ரயில் நிலையம் முன்பு கைது” என்ற தகவலுடன் பிப்ரவரி 4ஆம் தேதி நெல்லை நாகராஜன் என்ற பாலிமர் ஊடகத்தின் செய்தியாளர் தனது எக்ஸ் பக்கத்தில் வைரலாகும் காணொலியை பதிவிட்டுள்ளார்.

இறுதியில், நியூஸ் மீட்டர் தேடலின் முடிவில் முருகனுக்கு காவடி எடுத்துச் சென்றதற்காக நெல்லை முன்னாள் மேயர் புவனேஸ்வரி கைது செய்யப்பட்டதாக வைரலாகும் தகவல் தவறானது என்றும், உண்மையில் அவர் திருப்பரங்குன்றத்தில் நடைபெற இருந்த போராட்டத்திற்கு கலந்து கொள்வதற்காக சென்ற போது காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார் என்றும்  ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. 

இந்த உண்மைச் சரிபார்ப்பு நியூஸ் மீட்டர் (newsmeter.in) இணையதளத்தால் செய்யப்பட்டது மற்றும் சக்தி கூட்டுக்குழு (Shakti Collective) நமது இணைய பக்கத்துடன் பகிர்ந்து கொண்டது.

https://newsmeter.in/fact-check-tamil/tirunelveli-former-mayor-bhuvaneswari-arrested-for-taking-kavadi-743885

 

Viral Social Media Viral Viral Video Viral News Fact Check

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: