நெல்லை, தென்காசியில் மர்ம காய்ச்சல்? வைரல் பதிவின் உண்மைத் தன்மை என்ன?

தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் குழந்தைகள் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனக் குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் தகவல் ஒன்று வைரலாகி வருகிறது. அதன் உண்மைத் தன்மையை தெலுங்கு போஸ்ட் சார்பில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Fact Check Tirunelveli tenkasi dist mysterious fever spreading viral post Tamil News

தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் குழந்தைகள் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனக் குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் தகவல் ஒன்று வைரலாகி வருகிறது.

தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் குழந்தைகள் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனக் குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் தகவல் ஒன்று வைரலாகி வருகிறது. அதன் உண்மைத் தன்மையை தெலுங்கு போஸ்ட்  சார்பில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இந்த உண்மைச் சரிபார்ப்பு தெலுங்கு போஸ்ட்  (Telugu Post.com) இணையதளத்தால் செய்யப்பட்டது மற்றும் சக்தி கூட்டுக்குழு (Shakti Collective) நமது இணைய பக்கத்துடன் பகிர்ந்து கொண்டது.

Advertisment

தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் குழந்தைகளை குறிவைக்கும் மர்ம காய்ச்சல் பரவி வருகிறது என்ற தகவல்கள் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. இதனால் பொதுமக்களும், பெற்றோர்களும் பெரும் அச்சமடைந்துள்ளனர். இந்நிலையில், இந்த தகவல்களின் உண்மைத் தன்மையை தெலுங்கு போஸ்ட்  சார்பில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இந்த உண்மைச் சரிபார்ப்பு தெலுங்கு போஸ்ட்  (Telugu Post.com) இணையதளத்தால் செய்யப்பட்டது மற்றும் சக்தி கூட்டுக்குழு (Shakti Collective) நமது இணைய பக்கத்துடன் பகிர்ந்து கொண்டது.

சில செய்தி ஊடகங்கள் சமூக வலைதள பக்கங்களில் குறிப்பாக வாட்ஸ்அப், யூடியூப், முகநூல் மற்றும் எக்ஸ் (முன்பு ட்விட்டர்) போன்ற தளங்களில், "தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் குழந்தைகள் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர், மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும் சிலர் உயிரிழந்துள்ளனர்" என்று தகவல்கள் பரவி வருகின்றது. சில பதிவுகளில், இந்த காய்ச்சல் டெங்கு அல்லது பிற வைரஸ் காய்ச்சலாக இருக்கலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisment
Advertisements

உண்மைச்  சரிப்பார்ப்பு:

இந்நிலையில், தெலுங்கு போஸ்ட் உண்மைச் சரிப்பார்ப்பு குழு சார்பில் இந்தப் பதிவு ஆய்வு செய்யப்பட்டது. முதலில் முக்கிய வார்த்தைகளை கூகுள் தேடல் பயன்படுத்தி தேடியுள்ளனர். அப்போது மாலை மலர் செய்தித்தாளின் 2023-ல் வெளியிட்ட தகவலின்படி, ஆலங்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் குழந்தைகள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் காய்ச்சல் பிரிவில் 70-க்கும் மேற்பட்டோர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், டெங்கு காய்ச்சலும் அதிகளவில் பரவுவதால், அதனை கட்டுப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் என்ற செய்தியைக் கண்டறிந்துள்ளனர். 

இதேபோல், தினத்தந்தி செய்தித்தாளில் பிப்ரவரி12,2025 அன்று வெளியிட்ட செய்தியில், தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் 6 வயது சிறுமி மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, ஆலங்குளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். பின்னர், காய்ச்சல் அதிகரித்ததால் மீண்டும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது, வழியிலேயே அவர் உயிரிழந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

சமூக வலைதளங்களில் பரவும் தகவல்களின் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்துவதற்கு, அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் மற்றும் மருத்துவமனைகளின் தரவுகளைப் பெறுவது அவசியம். தற்போது, மாநில சுகாதாரத்துறை அல்லது மாவட்ட நிர்வாகத்தால் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியிடப்படவில்லை. எனவே, சமூக ஊடகங்களில் பரவும் தகவல்களை முறையாகச் சரிபார்க்காமல் பகிர்வது தவிர்க்கப்பட வேண்டும்.

மருத்துவ நிபுணர்கள், குறிப்பாக குழந்தைகள் நல மருத்துவர்கள் "காய்ச்சல் மற்றும் டெங்கு போன்ற நோய்கள் பருவநிலை மாற்றங்கள் ஏற்படும் சூழலின் போது அதிகரிக்கலாம். குழந்தைகளின் சுகாதாரத்தில் மாற்றங்கள் ஏற்பட்டால், உடனடியாக மருத்துவ ஆலோசனை பெறுவது மிக முக்கியம். சமூக ஊடகங்களில் பரவும் தகவல்களை நம்புவதற்கு முன், அதிகாரப்பூர்வ ஆதாரங்களைச் சரிபார்க்க வேண்டும்" என்று அறிவுறுத்துகின்றனர்.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு சார்பில் உண்மை சரிப்பார்ப்பு குழு (TN Fact Check) இந்த செய்தியினை மறுத்து பதிவிட்டுள்ளது. மேலும் அதில், தென்காசி மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் குளிர் காலத்தில் ஏற்படும் வழக்கமான காய்ச்சல் பாதிப்புக்கு மட்டுமே பொதுமக்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். எந்த ஒரு நபரும் மர்ம காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெறவில்லை என்று தென்காசி மாவட்ட மக்கள் நலப்பணிகள் இணைஇயக்குநர் விளக்கமளித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்டத்தில் 2020 ஆம் ஆண்டு, கொரோனா வைரஸ் தொடர்பான தவறான தகவல்கள் அதிகாரப்பூர்வ இடங்களில் கூட பரப்பப்பட்டன. உதாரணமாக, தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்ட செய்தியில் தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், கொரோனா வைரஸை குணப்படுத்தும் என கூறி, வெந்தயம் மற்றும் பூண்டு நீரைப் பருக வேண்டும் என்ற தவறான அறிவிப்புகள் ஒட்டப்பட்டிருந்தன. பின்னர், கலெக்டர் அவர்கள் இதனை நீக்க உத்தரவிட்டார்.

இத்தகைய தவறான தகவல்கள் பொதுமக்களை தவறான வழிகளில் கொண்டு செல்லக்கூடியது. எனவே, சமூக வலைதளங்களில்  பெறப்படும் தகவல்களை பகிர்வதற்கு முன், அதன் உண்மைத்தன்மையை அதிகாரப்பூர்வ ஆதாரங்களுடன் சரிபார்க்க வேண்டும். 

இறுதியில், தெலுங்கு போஸ்ட்  தேடலின் முடிவில் தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் குழந்தைகள் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனக் குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் பதிவு பொய்யானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. சமூக வலைதளங்களில் பெறப்படும் தகவல்களை பகிர்வதற்கு முன், அதன் உண்மைத்தன்மையை சரிபார்த்து, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு வலியுறுத்தியுள்ளனர். 

இந்த உண்மைச் சரிபார்ப்பு தெலுங்கு போஸ்ட்  (Telugu Post.com) இணையதளத்தால் செய்யப்பட்டது மற்றும் சக்தி கூட்டுக்குழு (Shakti Collective) நமது இணைய பக்கத்துடன் பகிர்ந்து கொண்டது.

https://www.telugupost.com/tamil-factcheck/is-a-mysterious-fever-spreading-in-tenkasi-district-what-is-the-truth-1568362

 

Viral Social Media Viral Fact Check

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: