Advertisment

முருகானந்தமா? வி.சி.க தலைவரா? ஸ்டாலின் கூறியதாக வைரலாகும் வீடியோ: உண்மை என்ன?

தமிழக அரசின் தலைமைச் செயலாளர் முருகானந்தத்தை வி.சி.க தலைவர் என்று முதல்வர் ஸ்டாலின் அழைத்துள்ளார் என்று குறிப்பிட்டு சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வரும் வீடியோவின் உண்மைத் தன்மையை நியூஸ்மீட்டர் இணைய பக்கம் சரிபார்த்துள்ளது.

author-image
WebDesk
New Update
Fact Check TN CM MK Stalin falsely mentioning vck leader as muruganantham IAS Viral Video Tamil News

தமிழக அரசின் தலைமைச் செயலாளர் முருகானந்தத்தை வி.சி.க தலைவர் என்று முதல்வர் ஸ்டாலின் அழைத்துள்ளார் என்று குறிப்பிட்டு சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வரும் வீடியோவின் உண்மைத் தன்மையை நியூஸ்மீட்டர் இணைய பக்கம் சரிபார்த்துள்ளது.

தமிழக அரசின் தலைமைச் செயலாளர் முருகானந்தத்தை வி.சி.க தலைவர் என்று முதல்வர் ஸ்டாலின் அழைத்துள்ளார் என்று குறிப்பிட்டு சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வரும் வீடியோவின் உண்மைத் தன்மையை நியூஸ்மீட்டர் இணைய பக்கம் சரிபார்த்துள்ளது. இந்த உண்மைச் சரிபார்ப்பு நியூஸ்மீட்டர் (Newsmeter.in) இணையதளத்தால் செய்யப்பட்டது மற்றும் சக்தி கூட்டுக்குழு (Shakti Collective) நமது இணைய பக்கத்துடன் பகிர்ந்து கொண்டது.

Advertisment

அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டப் பயனாளிகளுக்குக் கடனுதவிகள் வழங்கும் விழா கடந்த 06 ஆம் தேதி சென்னை ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற்றது. இதில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பங்கேற்று சிறப்புரை ஆற்றினார்.

அப்போது, பேசிய அவர், “தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் பெருமதிப்பிற்குரிய அருமை சகோதரர் செல்வப் பெருந்தகை அவர்களே, அரியலூர் மாவட்டத்தில் கலந்து கொண்டு சிறப்பித்துக் கொண்டிருக்கக்கூடிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திரு. முருகானந்தம் ஐ.ஏ.எஸ் அவர்களே…” என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பெயருக்கு பதிலாக தலைமைச் செயலாளர் முருகானந்தம் ஐ.ஏ.எஸ் என்று முதல்வர் கூறியதாக சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

“விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் முருகானந்தம் ஐ.ஏ.எஸ் ஆ முதல்வர் ஸ்டாலின் (@mkstalin) ??? கூட்டணி கட்சி தலைவர் பெயர் கூட தெரியல உங்களுக்கு மக்கள் கஷ்டம் எங்க தெரிய போகுது” என்கிற கேப்ஷனுடன் இந்த வீடியோவை பகிர்ந்து வருகின்றனர்.

Advertisment
Advertisement

உண்மை சரிபார்ப்பு 

இந்நிலையில், தமிழக அரசின் தலைமைச் செயலாளர் முருகானந்தத்தை வி.சி.க தலைவர் என்று முதல்வர் ஸ்டாலின் அழைத்தாரா? என்பது குறித்தும், சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வரும்  அந்த வீடியோவின் உண்மைத்  தன்மை  பற்றியும் நியூஸ் மீட்டர் இணையப் பக்கம் ஆய்வு செய்துள்ளது. 

இந்த வீடியோவின் உண்மை தன்மையை கண்டறிய வைரலாகும் வீடியோவில் இருக்கும், “Live: அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டப் …” என்ற கீவர்டைக்கொண்டு யூடியூபில் சர்ச் செய்து பார்த்துள்ளனர்.  அப்போது, அதன் முழுநீள காணொலி M.K. STALIN என்ற யூடியூப் சேனலில் டிசம்பர் 6 அன்று  பதிவிடப்பட்டிருந்தது. அதனை ஆய்வு செய்தபோது 0:48 பகுதியில் பேசும் முதல்வர் ஸ்டாலின், “அரியலூர் மாவட்டத்தில் கலந்து கொண்டு சிறப்பித்துக் கொண்டிருக்கக்கூடிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திரு. முருகானந்தம் ஐ.ஏ.எஸ் அவர்களே…” என்றே குறிப்பிடுகிறார்.

ஆனால், இதே வீடியோவை  சன் நியூஸ் ஊடகமும் அன்றைய தினம்  வெளியிட்டு இருந்தது. அதில், 16:00 பகுதியில் பேசும் முதல்வர் ஸ்டாலின், “அரியலூர் மாவட்டத்தில் கலந்து கொண்டு சிறப்பித்துக் கொண்டிருக்கக்கூடிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் என்னுடைய அருமை சகோதரர் எழுச்சித்தமிழர் திருமாவளவன் அவர்களே…” என்று குறிப்பிடுகிறார். இதே போன்று கூறுவதை 13:30 பகுதியில் புதிய தலைமுறை ஊடகம் வெளியிட்டுள்ள வீடியோவிலும் காணலாம்.

இறுதியாக, நியூஸ் மீட்டர் தேடலின் முடிவில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் முருகானந்தம் ஐ.ஏ.எஸ் என்று முதல்வர் மு. க. ஸ்டாலின் கூறியதாக வைரலாகும் வீடியோவில் இருப்பது தொழில்நுட்பக் கோளாறு என்றும், உண்மையில் அவர் சரியாகவே விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் என்று கூறுகிறார் என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. 

இந்த உண்மைச் சரிபார்ப்பு நியூஸ்மீட்டர் (Newsmeter.in) இணையதளத்தால் செய்யப்பட்டது மற்றும் சக்தி கூட்டுக்குழு (Shakti Collective) நமது இணைய பக்கத்துடன் பகிர்ந்து கொண்டது.

https://newsmeter.in/fact-check-tamil/cm-stalin-falsely-mentioning-vck-leader-as-muruganantham-ias-740222#google_vignette

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Viral Video Thirumavalavan Viral Social Media Viral Cm Mk Stalin Tamil Viral Video Viral News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment