அரசு நிகழ்ச்சியை தொடங்கி வைத்த துர்கா ஸ்டாலின்? வைரலாகும் வீடியோ: உண்மை என்ன?

தமிழக முதல்வர் ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் அரசு நிகழ்ச்சியை தொடங்கி வைத்ததாகக் குறிப்பிட்டு சமூக வலைதள பக்கங்களில் வீடியோ வைரலாகி வரும் நிலையில், அதன் உண்மைத் தன்மை குறித்து நியூஸ் மீட்டர் இணையப் பக்கம் சார்பில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
Fact Check TN CM MK Stalin wife durga stalin inaugurated govt function viral video Tamil News

தமிழக முதல்வர் ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் அரசு நிகழ்ச்சியை தொடங்கி வைத்ததாகக் குறிப்பிட்டு சமூக வலைதள பக்கங்களில் வீடியோ வைரலாகி வருகிறது.

தமிழக முதல்வர் ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் அரசு நிகழ்ச்சியை தொடங்கி வைத்ததாகக் குறிப்பிட்டு சமூக வலைதள பக்கங்களில் வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவின் உண்மைத் தன்மை குறித்து  நியூஸ் மீட்டர் இணையப் பக்கம் சார்பில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இந்த உண்மைச் சரிபார்ப்பு நியூஸ் மீட்டர் (newsmeter.in) இணையதளத்தால் செய்யப்பட்டது மற்றும் சக்தி கூட்டுக்குழு (Shakti Collective) நமது இணைய பக்கத்துடன் பகிர்ந்து கொண்டது.

Advertisment

“துர்கா ஸ்டாலின் என்ன எம்.எல்.ஏ-வா? இல்ல கவுன்சிலரா? அரசு திட்டத்தை தொடங்கி வைக்க இவங்க யாரு??? அரசு விழாக்களில் ஒரு குடும்பமே தமிழ்நாட்டு தொந்தரவு பண்றாங்க அய்யா மு.க ஸ்டாலின் தமிழ்நாடு மன்னராட்சி கிடையாது..! மன்னார் ஆட்சி நடக்கும் நாட்டில் கூட இப்படி எல்லாம் நடக்காது..!” என்ற கேப்டசனுடன் சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

 

அதில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் மக்களுக்கு உணவு வழங்கும் காட்சி பதிவாகியுள்ளது. இந்நிகழ்வு, அரசு விழா என்றும், அதில் எவ்வாறு எம்.எல்.ஏ. அல்லது கவுன்சிலர் பதவியில் கூட இல்லாத முதல்வரின் மனைவி பங்கேற்கலாம் என்றும் கேள்வி எழுப்பி அந்த வீடியோவை பரப்பி வருகின்றனர்.

Advertisment
Advertisements

இந்நிலையில், சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் அந்த வீடியோவின் உண்மைத் தன்மை குறித்து  நியூஸ் மீட்டர் இணையப் பக்கம் சார்பில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இந்த உண்மைச் சரிபார்ப்பு நியூஸ் மீட்டர் (newsmeter.in) இணையதளத்தால் செய்யப்பட்டது மற்றும் சக்தி கூட்டுக்குழு (Shakti Collective) நமது இணைய பக்கத்துடன் பகிர்ந்து கொண்டது.

உண்மைச் சரிபார்ப்பு

இது குறித்த உண்மையை கண்டறிய வீடியோவின் குறிப்பிட்ட பகுதியை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்துள்ளனர். அப்போது, “கொளத்தூரில் ஆண்டு முழுவதும் அன்னம் தரும் அமுதக் கரங்கள் திட்டம்... முதலமைச்சர் பிறந்தநாளையொட்டி திறந்து வைத்தார் துர்கா ஸ்டாலின்” என்று வைரலாகும் அதே வீடியோவை பாலிமர் ஊடகம் பிப்ரவரி 20 அன்று வெளியிட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, கிடைத்த தகவலைக் கொண்டு கூகுளில் கீவர்ட் சர்ச் செய்து பார்த்துள்ளனர். அப்போது, ஏ.பி.பி நாடு ஊடகம் பிப்ரவரி 20 அன்று இதுதொடர்பாக செய்தி வெளியிட்டிருந்தது. அதில், “சென்னை கொளத்தூர் ஜெகநாதன் தெரு முதல்வர் படைப்பகம் அருகில் சென்னை கிழக்கு மாவட்டம் சார்பில் ஆண்டு முழுவதும் அன்னம் தரும் அமுதக் கரங்கள் என்ற திட்டத்தை துர்கா ஸ்டாலின் தொடங்கி வைத்து பொது மக்களுக்கு உணவளித்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி மக்கள் முதல்வரின் மனிதநேய விழாவின் முதல் நிகழ்ச்சியாக பிப்ரவரி 20 ஆம் தேதியான இன்று தொடங்கி அடுத்த ஆண்டு பிப்ரவரி 19 ஆம் தேதி வரை 365 நாட்களும் நாள் ஒன்றுக்கு 1000 முதல் 1200 பேருக்கு துறைமுகம், திரு.வி.க நகர், அம்பத்தூர், வில்லிவாக்கம், எழும்பூர் தொகுதிகள் என கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து தொகுதிகளிலும் அமுதக் கரங்கள் திட்டம் மூலம் தினம் தோறும் பொதுமக்களுக்கு காலை உணவு வழங்கப்பட உள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கொளத்தூரில் ஆண்டு முழுவதும் அன்னம் தரும் அமுதக் கரங்கள் திட்டம்... முதலமைச்சர் பிறந்தநாளையொட்டி திறந்து வைத்தார் துர்கா ஸ்டாலின்

Posted by Polimer News on Wednesday, February 19, 2025

இதே செய்தியை மாலைமலர், தினமணி உள்பட பல்வேறு ஊடகங்களும் வெளியிட்டுள்ளன. இந்த செய்திகளைக் கொண்டு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் பங்கேற்ற நிகழ்ச்சி கட்சி நிகழ்ச்சி என்றும் அரசியல் நிகழ்ச்சி இல்லை என்றும் தெரிய வந்துள்ளது. 

இறுதியில், நியூஸ் மீட்டர் தேடலின் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் அரசு நிகழ்ச்சியை துவக்கி வைத்ததாக சமூக வலைதளங்களில் வைரலாகும் தகவல் தவறானது என்றும், உண்மையில் துர்கா ஸ்டாலின் முதல்வரின் பிறந்தநாள் விழாக் கொண்டாட்டத்தின் முதல் நிகழ்ச்சியான அமுத கரங்கள் திட்டத்தை துவக்கி வைத்தார் என்றும் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. மேலும், இது கட்சி நிகழ்ச்சி எனவும் உறுதி செய்துள்ளனர். 

இந்த உண்மைச் சரிபார்ப்பு நியூஸ் மீட்டர் (newsmeter.in) இணையதளத்தால் செய்யப்பட்டது மற்றும் சக்தி கூட்டுக்குழு (Shakti Collective) நமது இணைய பக்கத்துடன் பகிர்ந்து கொண்டது.

https://newsmeter.in/fact-check-tamil/cm-wife-durga-stalin-inaugurated-government-function-744111

Viral Social Media Viral Viral Video Viral News Fact Check

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: