பெரியார்- மணியம்மை திருமணம்: கொச்சையாக பேசினாரா துரைமுருகன்? உண்மை என்ன?
“தி.மு.க உருவான வரலாறு” என்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேசிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், அதன் உண்மைத் தன்மை குறித்து நியூஸ்மீட்டர் இணையப் பக்கம் சார்பில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது.
“தி.மு.க உருவான வரலாறு” என்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேசிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
“தி.மு.க உருவான வரலாறு” என்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேசிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், அதன் உண்மைத் தன்மை குறித்து நியூஸ்மீட்டர் இணையப் பக்கம் சார்பில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இந்த உண்மைச் சரிபார்ப்பு நியூஸ் மீட்டர் (newsmeter.in) இணையதளத்தால் செய்யப்பட்டது மற்றும் சக்தி கூட்டுக்குழு (Shakti Collective) நமது இணைய பக்கத்துடன் பகிர்ந்து கொண்டது.
Advertisment
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தந்தை பெரியார் குறித்து அவதூறான கருத்துகளைப் பேசியது தமிழ்நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து, பெரியார் தொடர்பாக பல்வேறு செய்திகள் பரவி வருகின்றன. இந்நிலையில், “தி.மு.க உருவான வரலாறு” என்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேசிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், “பெரியார் எங்கள் ஊருக்கு வந்தார். மணியம்மையைப் பார்த்தார் கூட்டிச் சென்றார். அவரை திருமணம் செய்துகொண்டார். அண்ணா, இது பொருந்தா திருமணம் என்று அறிக்கை வெளியிட்டார். கழகத்திலிருந்து வெளியேறினார். தி.மு.க உருவானது. ஆக வேலூரில் உள்ள மணியம்மை இல்லாவிட்டால், அவரை பெரியார் திருமணம் செய்யாவிட்டால், தி.மு.க வந்திருக்காது” என்கிறார். இதில் பெரியார் மணியம்மையைக் கூட்டிச் சென்று திருமணம் செய்து கொண்டார் என்று கொச்சையாக துரைமுருகன் பேசியது போன்று உள்ளது.
இந்த நிலையில், சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வரும் வீடியோ குறித்து நியூஸ்மீட்டர் இணையப் பக்கம் சார்பில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இந்த உண்மைச் சரிபார்ப்பு நியூஸ் மீட்டர் (newsmeter.in) இணையதளத்தால் செய்யப்பட்டது மற்றும் சக்தி கூட்டுக்குழு (Shakti Collective) நமது இணைய பக்கத்துடன் பகிர்ந்து கொண்டது.
Advertisment
Advertisement
உண்மை சரிபார்ப்பு
சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் வீடியோவின் உண்மை தன்மையை கண்டறிய இதுதொடர்பாக யூடியூபில் தேடிப் பார்த்துள்ளனர். அப்போது ஒன்இந்தியா தமிழ் கடந்த 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் 23 ஆம் தேதி வைரலாகும் வீடியோவை வெளியிட்டிருந்தது. அந்த வீடியோவில் பேசும் துரைமுருகன், “பெரியார் எங்கள் ஊருக்கு வந்தார். மணியம்மையைப் பார்த்தார் கூட்டிச் சென்றார். அவருக்கு தொண்டு செய்ய வைத்திருந்தார். நீண்ட நாட்களுக்குப் பிறகு, தனக்குப்பின் அந்த இயக்கத்தை வழிநடத்த ஒரு அறிவுள்ள பெருமாட்டி கிடைத்தார் என்று அவரை திருமணம் செய்து கொண்டார். அண்ணா, இது பொருந்தா திருமணம் என்று அறிக்கை வெளியிட்டார். கழகத்திலிருந்து வெளியேறினார், திமுக உருவானது. ஆக வேலூரில் உள்ள மணியம்மை இல்லாவிட்டால், அவரை பெரியார் திருமணம் செய்யாவிட்டால் தி.மு.க வந்திருக்காது” என்கிறார்.
இதில், “அவருக்கு தொண்டு செய்ய வைத்திருந்தார். நீண்ட நாட்களுக்குப் பிறகு, தனக்குப்பின் அந்த இயக்கத்தை வழிநடத்த ஒரு அறிவுள்ள பெருமாட்டி கிடைத்தார்” என்று துரைமுருகன் கூறியதை நீக்கிவிட்டு நேரடியாக பெரியார் மணியம்மையை கூட்டிச் சென்று திருமணம் செய்து கொண்டார் என்று கொச்சையாக கூறியதாக எடிட் செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளளது. மேலும், அவர் இவ்வாறு பேசியதற்கு வருத்தம் தெரிவித்ததாகவும் அதே ஒன்இந்தியா தமிழ் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இறுதியில், நியூஸ் மீட்டர் தேடலின் முடிவில், பெரியார் மணியம்மையை கூட்டிச் சென்று திருமணம் செய்து கொண்டார் என்று துரைமுருகன் கொச்சையாக கூறியதாக சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ எடிட் செய்யப்பட்டுள்ளது என்று ஆதாரப்பூர்வமாக நிரூபித்துள்ளனர்.
இந்த உண்மைச் சரிபார்ப்பு நியூஸ் மீட்டர் (newsmeter.in) இணையதளத்தால் செய்யப்பட்டது மற்றும் சக்தி கூட்டுக்குழு (Shakti Collective) நமது இணைய பக்கத்துடன் பகிர்ந்து கொண்டது.

https://newsmeter.in/fact-check-tamil/did-minister-duraimuragan-comment-about-periyar-marrying-maniyammai-742415
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.