Fact Check: லக்னோவில் வந்தே பாரத் ரயில்கள் மோதல்? வைரலாகும் வீடியோ: உண்மை என்ன?

உத்திரப்பிரதேச மாநிலம் லக்னோவில் 2 வந்தே பாரத் ரயில்கள் விபத்துக்குள்ளாகி இருப்பதாக சமூக வலைதளத்தில் தகவல் ஒன்று வைரலாகி வரும் நிலையில், அதன் உண்மைத் தன்மை குறித்து நியூஸ் மீட்டர் இணையப் பக்கம் சார்பில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Fact Check vande bharat trains collide in lucknow viral video Tamil News

உத்திரப்பிரதேச மாநிலம் லக்னோவில் இரண்டு ரயில்கள் விபத்துக்குள்ளாகி இருப்பதாகவும், அவை இரண்டும் வந்தே பாரத் ரயில்கள் எனவும் சமூக வலைதளத்தில் தகவல் ஒன்று வைரலாகி வருகிறது.

உத்திரப்பிரதேச மாநிலம் லக்னோவில் இரண்டு ரயில்கள் விபத்துக்குள்ளாகி இருப்பதாகவும், அவை இரண்டும்  வந்தே பாரத் ரயில்கள் எனவும் சமூக வலைதளத்தில் தகவல் ஒன்று  வைரலாகி வருகிறது. அந்த தகவலின் உண்மைத் தன்மை குறித்து நியூஸ் மீட்டர் இணையப் பக்கம் சார்பில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இந்த உண்மைச் சரிபார்ப்பு நியூஸ் மீட்டர் (newsmeter.in) இணையதளத்தால் செய்யப்பட்டது மற்றும் சக்தி கூட்டுக்குழு (Shakti Collective) நமது இணைய பக்கத்துடன் பகிர்ந்து கொண்டது.

Advertisment

உத்திரப்பிரதேச மாநிலம் லக்னோவில் இரண்டு ரயில்கள் விபத்துக்குள்ளாகி இருப்பதாகவும், அவை இரண்டும்  வந்தே பாரத் ரயில்கள் எனவும் சமூக வலைதளத்தில் தகவல் ஒன்று  வைரலாகி வருகிறது. இது தொடர்பான தகவலை இன்ஸ்டாகிராம் தளத்தில் பயனர் ஒருவர் பகிர்ந்துள்ளார்.

உண்மைச் சரிபார்ப்பு 

Advertisment
Advertisements

இந்நிலையில்,  சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் அந்த தகவலின் உண்மைத் தன்மை குறித்து நியூஸ் மீட்டர் இணையப் பக்கம் சார்பில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இந்த உண்மைச் சரிபார்ப்பு நியூஸ் மீட்டர் (newsmeter.in) இணையதளத்தால் செய்யப்பட்டது மற்றும் சக்தி கூட்டுக்குழு (Shakti Collective) நமது இணைய பக்கத்துடன் பகிர்ந்து கொண்டது.

உண்மையை கண்டறிய கீ வேர்ட் சர்ச் செய்து பார்த்துள்ளனர். அப்போது பிப்ரவரி 5 அன்று அமர் உஜாலா தளத்தில் கோரக்பூரில் இருந்து பிரயாக்ராஜ் செல்லும் வந்தே பாரத் ரயில் ஒரு மாடு மீது மோதியதாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இந்த விபத்தில் யாரும் உயிரிழந்ததாகவோ காயம் அடைந்ததாகவோ எந்த செய்தியும் இல்லை. வேறு ரயிலுடன் மோதியது குறித்தும் விபரம் எதுவும் இல்லை. அதே போல வைரலாகும் வீடியோ குறித்தும் குறிப்பிடப்படவில்லை. விபத்தில் சிக்கிய ரயிலும் வந்தே பாரத் போல் தோற்றமளிக்கவில்லை.

ரிவேர்ஸ் இமேஜ் சரிச் செய்த போது இதே சம்பவம் போன்று தோற்றமளிக்கும் விபத்தின் விரிவான காணொலி அசோசியேட்டட் பிரஸ் தளத்தில் ஜூன் 20, 2024 அன்று ‘சிலி ரயில் விபத்தில் 2 பேர் மரணம், ஏராளமானோர் காயம்’, என்ற தலைப்பில் செய்தி வெளியிடப்பட்டதை அறிய முடிந்தது. இந்த செய்தியில் சிலி நாட்டின் சண்டியாகோ நகர பகுதியில் பயணிகள் ரயில் ஒன்று சோதனை ரயிலுடன் நேருக்கு நேராக மோதியதில் இரண்டு பேர் மரணமடைந்த்தாகவு, ஒன்பது பேர் காயமடைந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இரண்டு வீடியோக்களின் ஒப்பீடு செய்த புகைப்படங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இதே புகைப்படங்களுடன், விபத்து குறித்த செய்தியுடன் 'தி இந்து' செய்தி நிறுவனமும் ஜூன் 20,2024 அன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்த செய்திகளின் அடிப்படையில் சமூக வலைதளங்களில் வந்தே பாரத் ரயில்கள் லக்லோவில் விபத்திற்குள்ளானதாக பரவும் செய்தி தவறானது என நிரூபிக்கப்பட்டுள்ளது. 

இந்த உண்மைச் சரிபார்ப்பு நியூஸ் மீட்டர் (newsmeter.in) இணையதளத்தால் செய்யப்பட்டது மற்றும் சக்தி கூட்டுக்குழு (Shakti Collective) நமது இணைய பக்கத்துடன் பகிர்ந்து கொண்டது.

https://newsmeter.in/fact-check-tamil/did-vande-bharat-trains-collide-in-lucknow-743502

Viral Lucknow Viral Video Vande bharat Trian Fact Check

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: