உத்தர பிரதேச மாநிலம் வாரணாசி விமான நிலையத்தில் ‘ஆகாசா ஏர்’ நிறுவனத்துக்குச் சொந்தமான விமானத்தில் ‘சமஸ்கிருதத்தில் விமான அறிவிப்பு’ வெளியானதாகக் குறிப்பிட்ட வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவின் உண்மைத் தன்மை குறித்து பேக்ட்லி இணைய பக்கம் இணைய பக்கம் சரிபார்த்துள்ளது. இந்த உண்மைச் சரிபார்ப்பு பேக்ட்லி (factly.in) இணையதளத்தால் செய்யப்பட்டது மற்றும் சக்தி கூட்டுக்குழு (Shakti Collective) நமது இணைய பக்கத்துடன் பகிர்ந்து கொண்டது.
உத்தர பிரதேச மாநிலம் வாரணாசி விமான நிலையத்தில் ‘ஆகாசா ஏர்’ நிறுவனத்துக்குச் சொந்தமான விமானத்தில் ‘சமஸ்கிருதத்தில் விமான அறிவிப்பு’ வெளியானதாகக் குறிப்பிட்ட வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இந்நிலையில், ‘ஆகாசா ஏர்’ விமானத்தில் ‘சமஸ்கிருதத்தில் விமான அறிவிப்பு’ வெளியானதாகக் குறிப்பிட்ட வீடியோவின் உண்மைத் தன்மை குறித்து பேக்ட்லி இணைய பக்கம் இணைய பக்கம் ஆய்வு செய்துள்ளது.
இந்த வீடியோவை, சமூக வலைதள வீடியோ கிரியேட்டரான 'சான்ஸ்கிரிட் ஸ்பார்ரோவ்' என்பவர் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவேற்றியுள்ளார். அந்த வீடியோவின் கேப்ஷனில், ‘ஆகாசா ஏர்’ நிறுவனத்துக்கு சொந்தமான விமானத்தில் சமஸ்கிருதத்தில் அறிவிக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார். ஆனால், வீடியோவில் உள்ள அறிவிப்பு அதிகாரப்பூர்வமானது அல்ல என்று ‘ஆகாசா ஏர்’ நிறுவனம் தெளிவுபடுத்தியுள்ளது.
வைரலாகி வரும் வீடியோவில் 'சான்ஸ்கிரிட் ஸ்பார்ரோவ்' என்ற இன்ஸ்டாகிராம் கணக்கின் வாட்டர்மார்க்கை முதலில் கவனித்த பிறகு, இந்த பக்கத்தை ஆன்லைனில் தேடப்பட்டுள்ளது. அந்த தேடலில், சமஸ்தி குப்பி என்பவருக்கு கணக்கு சொந்தமானது என்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும், அவர் 6 ஜூன் 2024 அன்று சமஸ்கிருத விமான அறிவிப்பு வீடியோவை பதிவேற்றினார் என்பதையும் கண்டுபிடித்துள்ளனர்.
அந்த பதிவின் வீடியோ விளக்கத்தில், அந்த வீடியோவில் ‘டப்பிங் செய்யப்பட்ட வாய்ஸ் ஓவர்’ இருப்பதாகவும், அது எந்த விமானத்திலும் செய்யப்பட்ட உண்மையான அறிவிப்பு அல்ல என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அந்த வீடியோவுக்கும் ‘ஆகாசா ஏர்’ படத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் அவர் தெளிவுபடுத்தி இருக்கிறார்.
Hi Kishore, we would like to clarify that our inflight announcements are delivered in Hindi and English. The announcement in the video is not an official one and seems to be a dubbed video that has been shared.
— Akasa Air (@AkasaAir) June 8, 2024
இந்தக் கூற்று தொடர்பான மேலதிக தேடலின் மூலம், இந்த வீடியோ குறித்து ‘ஆகாசா ஏர்’ நிறுவனமும் தெளிவுபடுத்தியிருப்பதைக் கண்டறிந்துள்ளனர். வைரலான வீடியோவைப் பற்றிய சமூக ஊடகப் பதிவின் கீழ் கருத்துத் தெரிவித்த அவர்கள், 'வீடியோவில் உள்ள அறிவிப்பு அதிகாரப்பூர்வமானது அல்ல, அது பகிரப்பட்ட டப்பிங் வீடியோவாகத் தெரிகிறது' என்றும், அவர்களது விமானப் பயண அறிவிப்புகள் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் வெளியிடப்படுவதாகவும் கூறியுள்ளனர்.
ஆகாச ஏர் விமானங்களில் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் இதுபோன்ற அறிவிப்புகளின் வீடியோக்களை இங்கே நீங்கள் பார்க்கலாம். எனவே, சுருக்கமாக சொல்வதென்றால், "ஆகாசா ஏர் விமானம் டப்பிங் செய்யப்பட்டுள்ளது" என்ற சமஸ்கிருத பயண அறிவிப்பை இந்த வீடியோ காட்டுவதாக பேக்ட்லி இணைய பக்க ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன. இந்த தவறான தகவலை யாரும் பகிர வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டுள்ளனர்.
இந்த உண்மைச் சரிபார்ப்பு பேக்ட்லி (factly.in) இணையதளத்தால் செய்யப்பட்டது மற்றும் சக்தி கூட்டுக்குழு (Shakti Collective) நமது இணைய பக்கத்துடன் பகிர்ந்து கொண்டது.
https://factly.in/a-dubbed-voice-over-video-is-falsely-being-shared-as-real-visuals-of-a-sanskrit-inflight-announcement-in-akasa-air/
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.