Advertisment

அரபு நாடுகளுக்கு விற்கப்படும் இந்து பெண்கள்? வைரல் வீடியோவின் உண்மைத் தன்மை என்ன?

வெளிநாட்டில் வேலை என ஏமாற்றி இந்து பெண்கள் அரபு நாடுகளில் விற்கப்படுவதை தடுத்து நிறுத்திய இந்து இளைஞர் என்று சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோவின் உண்மைத் தன்மை குறித்து நியூஸ்மீட்டர் இணையப்பக்கம் சார்பில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
Fact Check youth stop sale of hindu women to gulf countries Tamil News

வெளிநாட்டில் வேலை என ஏமாற்றி இந்து பெண்கள் அரபு நாடுகளில் விற்கப்படுவதை தடுத்து நிறுத்திய இந்து இளைஞர் என்று சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

இந்துக்களை இஸ்லாமியர்கள் துன்புறுத்துவது போன்றும், இந்துக்களுக்கு எதிரானவர்கள் இஸ்லாமியர்கள் என்றும் கூறி பல்வேறு தகவல்கள் சமூக வலைதளங்களில் வலதுசாரியினரால் பரப்பப்படுவது தொடர் கதையாக உள்ளது. இந்நிலையில், “ஹிந்து சொந்தங்களுக்கான எச்சரிக்கைப் பதிவு. வெளிநாட்டில் வேலை என ஏமாற்றி ஹிந்து பெண்களை அரபு நாடுகளில் விற்கப்படுவதை தடுத்த ஒரு ஹிந்து இளைஞர்” என்று கூறி சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

Advertisment

அந்த வீடியோவில், இளைஞர் ஒருவரும் பெண்ணும் இணைந்து வீட்டிற்குள் நுழைந்து அங்குள்ள மற்றொரு இளைஞரை தாக்கி வீட்டில் அடைத்து வைக்கப்பட்டுள்ள பெண்களை விடுவிப்பது போன்ற காட்சி பதிவாகியுள்ளது. இப்பெண்கள் இந்துக்கள் என்றும், இவர்கள் அரபு நாடுகளுக்கு விற்கப்படுவதாகவும் கூறி அந்த வீடியோவை பகிர்ந்து வருகின்றனர்.

இந்த நிலையில், சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி  வரும் அந்த வீடியோவின் உண்மைத் தன்மை குறித்து நியூஸ்மீட்டர் இணையப்பக்கம் சார்பில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இந்த உண்மைச் சரிபார்ப்பு நியூஸ் மீட்டர் (newsmeter.in) இணைய தளத்தால் செய்யப்பட்டது மற்றும் சக்தி கூட்டுக்குழு (Shakti Collective) நமது இணைய பக்கத்துடன் பகிர்ந்து கொண்டது.

Advertisment
Advertisement

 உண்மைச் சரிபார்ப்பு

சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் வீடியோவின் உண்மை தன்மையை கண்டறிய அதனை முதலில் ஆராய்ந்துள்ளனர். அப்போது, வீடியோவின் 10 விநாடியில், “இந்த வீடியோ பொழுதுபோக்கிற்காக மட்டுமே” என்று பொறுப்பு துறந்துள்ளனர். இதனைக் கொண்டு வைரலாகும் வீடியோ பொழுதுபோக்காக எடுக்கப்பட்டது என்பதை அறிய முடிகிறது. 

தொடர்ந்து, வீடியோவின் குறிப்பிட்ட பகுதியை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்துள்ளனர். அப்போது, 2023 ஆம் ஆண்டு பிப்ரவரி 13 ஆம் தேதி வைரலாகும் வீடியோவின் முழு நீள பதிவு நவீன் ஜங்ரா (Naveen Jangra) என்ற யூடியூப் சேனல் வெளியிட்டுள்ளது. அதிலும், இந்த வீடியோ பொழுதுபோக்கிற்காக மட்டுமே என்று பொறுப்பு துறந்துள்ளனர். மேலும், அந்த யூடியூப் சேனலை ஆய்வு செய்த நிலையில், அதில், வைரலாகும் வீடியோவில்  இருப்பது போன்ற பல்வேறு பொழுதுபோக்கு வீடியோக்கள்  வெளியிடப்பட்டு வருவது கண்டறியப்பட்டுள்ளது. 

இறுதியாக, நியூஸ் மீட்டர் தேடலின் முடிவில், வெளிநாட்டில் வேலை என ஏமாற்றி இந்து பெண்கள் அரபு நாடுகளில் விற்கப்படுவதை தடுத்து நிறுத்திய இந்து இளைஞர் என்று சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ உண்மையில் பொழுதுபோக்கிற்காக எடுக்கப்பட்டது என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. 

இந்த உண்மைச் சரிபார்ப்பு நியூஸ் மீட்டர் (newsmeter.in) இணையதளத்தால் செய்யப்பட்டது மற்றும் சக்தி கூட்டுக்குழு (Shakti Collective) நமது இணைய பக்கத்துடன் பகிர்ந்து கொண்டது.

https://newsmeter.in/fact-check-tamil/did-hindu-youth-stop-sale-of-hindu-women-to-gulf-countries-742572

Viral Social Media Viral Viral Video Viral News Fact Check
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment