மணமகன், மணமகள் இல்லாத கோலாகலத் திருமணம்! ரூ.1,499 போதும்... வினோத 'போலி கல்யாண' கொண்டாட்டம்!

இந்தியாவின் பெருநகரங்களில் ஒரு புதிய, விசித்திரமான டிரெண்ட் சூடுபிடித்துள்ளது. உண்மையான மணமக்கள் இல்லாத, ஆனால் அனைத்து கல்யாண சடங்குகளும், கொண்டாட்டங்களும் நிறைந்த "போலி திருமண நிகழ்வுகள்" தான் இன்றைய டாக் ஆஃப் தி டவுன்.

இந்தியாவின் பெருநகரங்களில் ஒரு புதிய, விசித்திரமான டிரெண்ட் சூடுபிடித்துள்ளது. உண்மையான மணமக்கள் இல்லாத, ஆனால் அனைத்து கல்யாண சடங்குகளும், கொண்டாட்டங்களும் நிறைந்த "போலி திருமண நிகழ்வுகள்" தான் இன்றைய டாக் ஆஃப் தி டவுன்.

author-image
WebDesk
New Update
Fake wedding] party

நொய்டாவில் இன்று (ஜூலை 12, வெள்ளி) இரவு ட்ரிப்பி டெக்கிலாவில் ஒரு இத்தகைய நிகழ்வு களை கட்டவுள்ளது. விருந்தினர்கள் தங்களது சிறந்த பாரம்பரிய உடைகளை அணிந்து வரலாம்.

திருமணங்களில் கலந்து கொண்டு சாப்பிட, ஆட, பாட, கொண்டாட்டங்களில் திளைக்க ஆசையா? ஆனால், அதற்காக ஒரு திருமணம் நடக்கும் வரை காத்திருக்க வேண்டுமா? இனி அந்த அவசியமில்லை! இந்தியாவின் பெருநகரங்களில் ஒரு புதிய, விசித்திரமான டிரெண்ட் சூடுபிடித்துள்ளது. உண்மையான மணமக்கள் இல்லாத, ஆனால் அனைத்து கல்யாண சடங்குகளும், கொண்டாட்டங்களும் நிறைந்த "போலி திருமண நிகழ்வுகள்" தான் இன்றைய டாக் ஆஃப் தி டவுன்!

Advertisment

நொய்டாவில் இன்று (ஜூலை 12, வெள்ளி) இரவு ட்ரிப்பி டெக்கிலாவில் ஒரு இத்தகைய நிகழ்வு களை கட்டவுள்ளது. விருந்தினர்கள் தங்களது சிறந்த பாரம்பரிய உடைகளை அணிந்து வரலாம். மணமக்களை வரவேற்கும் 'பாரத்' பாணி ஊர்வலம், போலி மாலை மாற்றும் சடங்கு, நடன நிகழ்ச்சிகள் என நான்கு மணி நேரம் இடைவிடாத கொண்டாட்டத்திற்கு நீங்கள் தயாராகலாம். டிக்கெட் விலை? பெண்களுக்கு ரூ.999, ஆண்கள்/ஜோடிகளுக்கு ரூ.1,499 மட்டுமே! BookMyShow தளத்தில் டிக்கெட்டுகளைப் பெறலாம்.

இந்த 'போலி திருமண' அழைப்பிதழ் எக்ஸ் சமூக ஊடகத்தில் வைரலாகி, நெட்டிசன்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. சிலர் இதை "விசித்திரமானது" என்று வர்ணித்தாலும், பலரும் இந்த யோசனையை வெகுவாக ரசிக்கிறார்கள்.

Advertisment
Advertisements

உண்மையான திருமணங்களின் "நிதி மற்றும் உணர்ச்சிபூர்வமான சுமைகளை" நீக்கிவிட்டு, அதன் கலாச்சார உற்சாகத்தை மட்டும் அனுபவிக்க விரும்புபவர்களுக்கு இந்த நிகழ்வுகள் ஒரு வரப்பிரசாதம். குறிப்பாக, திருமணங்களின் மகிழ்ச்சியையும், ஆர்ப்பாட்டங்களையும் எந்தவித பொருளாதார அல்லது உணர்வுபூர்வமான சுமையுமின்றி அனுபவிக்க நினைப்பவர்களுக்கு இது சரியான வழி.

இந்த டிரெண்டைப் பற்றிய எதிர்வினைகள் எக்ஸ் தளத்தில் ஏராளம். டார்ஷன் ராஜ்குரு (@DarshanRajguru5) பெர்லினிலும் இதே போன்ற நிகழ்வுகள் நடப்பதாகக் குறிப்பிட, மோனிகா (@musing_monica) "திருமணங்களுக்கு அழைக்கப்படாதவர்களுக்கு இது நல்லது" என்று நகைச்சுவையாகக் கருத்து தெரிவித்தார். 

நாக்பூரிலும் இதுபோல 'போலி திருமண நிகழ்வுகள்' நடப்பதாக சீன்ட்ரெல்லா (@ishag_talks) பகிர்ந்து கொண்டார். ரூ.1,499-க்கு உண்மையிலேயே ஒரு புரோகிதருடன் வந்து யாராவது திருமணம் செய்து கொள்வார்களா என்று அனுநய் (@anunay_24) கற்பனை செய்து பார்த்தார்.

இந்த நிகழ்வுகள் ஆடம்பரமாகவும், நடனமாடவும் ஒரு வாய்ப்பை வழங்கினாலும், எந்தவித கட்டுப்பாடுகளும் இல்லாத வடிவத்தில் கலாச்சார கொண்டாட்டத்திற்கான நகர்ப்புற மக்களின் பரந்த விருப்பத்தையே இது காட்டுகிறது. தனித்துவமான சமூக அனுபவங்களைத் தேடும் இன்றைய இளைய சமுதாயத்தின் புதிய ட்ரெண்ட் இது.

Viral News

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: