தியேட்டர்களுக்கு செல்லும்போது நமக்கு மிகவும் கடுப்பாகும் ஒரு விஷயம் நமக்கு பிடித்த நொறுக்கு தீனிகளை உள்ளே எடுத்து செல்ல முடியாது என்பதுதான். தியேட்டரில் விற்கும் திண்பண்டங்களை எவ்வளவு விலை கொடுத்தாலும் வாங்க வேண்டியுள்ளது. அதற்கெல்லாம் சிறந்த தீர்வை ஏஞ்செலா பிரிஸ்க் என்ற பெண் கண்டறிந்துள்ளார்.
தன்னை கர்ப்பிணி பெண் போல், வயிற்றுக்குள் பிடித்த திண்பண்டங்களையெல்லாம் தியேட்டருக்குள் உள்ளே எடுத்து செல்கிறார் இவர். இதுகுறித்து தன்னுடைய புகைப்படம் ஒன்றையும் அவர் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த கட்டுரை வெளியாகும் வரை அந்த பதிவுக்கு சுமார் 41,000 பேர் விருப்பங்களும், 19,000க்கும் மேற்பட்டோர் ரீட்வீட்டும் செய்துள்ளனர்.
தங்களுக்கு பிடித்த திண்பண்டங்களை தியேட்டர் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட இடங்களுக்கு கொண்டு செல்ல இது சிறந்த வழி என பலரும் அந்த பதிவில் கருத்திட்டு வருகின்றனர்.
ஆனால், இதனை பெண்கள் மட்டும்தானே பின்பற்ற முடியும். ஆண்கள் என்ன செய்வார்கள்? பாவம்.