/indian-express-tamil/media/media_files/2025/05/05/2dIftmhjwbeVM7z1z4QR.jpg)
குனியமுத்தூர் விஜயலட்சுமி மில் அருகே இந்த பரபரப்பான சம்பவம் நடந்துள்ளது. திரும்ப முயன்ற கார் மீது மின்னல் வேகத்தில் வந்த ஆட்டோ பயங்கரமாக மோதியதில், ஆட்டோ தலைகுப்புற பல்டி அடித்து உருண்டது.
கோவையில் அதிவேகமாக சென்ற ஆட்டோ ஒன்று கார் திரும்பும் போது எதிர்பாராதவிதமாக மோதி தலைகுப்புற குட்டிக்கரணம் அடித்த விபத்து அரங்கேறியுள்ளது. இந்த விபத்தின் சிசிடிவி வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி, பார்ப்பவர்களை ஒரு நிமிடம் பதற வைத்துள்ளது.

குனியமுத்தூர் விஜயலட்சுமி மில் அருகே இந்த பரபரப்பான சம்பவம் நடந்துள்ளது. திரும்ப முயன்ற கார் மீது மின்னல் வேகத்தில் வந்த ஆட்டோ பயங்கரமாக மோதியதில், ஆட்டோ தலைகீழாக கவிழ்ந்து உருண்டது. அதிர்ஷ்டவசமாக, ஆட்டோ ஓட்டுநர் சாலையில் தூக்கி வீசப்பட்டாலும், சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். விபத்துக்குள்ளான ஆட்டோ தானாகவே சாலையோரம் சென்று நின்ற காட்சி மேலும் வியப்பை ஏற்படுத்தியது.
இந்த விபத்துக்கான முக்கிய காரணம் ஆட்டோவின் அதீத வேகம் தான் என்று முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. சாலையில் திரும்பும் வாகனங்களை கவனிக்காமல் அதிவேகமாக சென்றதே இந்த விபரீதத்திற்கு வழிவகுத்தது.
கடந்த மார்ச் மாதம் நடந்த இந்த விபத்தின் சிசிடிவி காட்சி, சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ அதிவேகமாக வாகனங்களை இயக்குவதால் ஏற்படும் ஆபத்தை கண்முன் நிறுத்துகிறது. தலைகுப்புற பல்டியடித்த ஆட்டோவின் பதற வைக்கிறது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் பெரிய அளவில் காயம் ஏற்படவில்லை. இந்த சம்பவம், வாகன ஓட்டிகள் சாலையில் எவ்வளவு கவனமுடனும், மித வேகத்துடனும் செல்ல வேண்டும் என்பதை வலியுறுத்துவதாக உள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.