இந்த ட்ரிக் இத்தனை நாள் தெரியாம போச்சே.. குழந்தையை தூங்க வைக்க இப்படி ஒரு வழியா?

திடீரென்று விழித்து பார்க்கும் குழந்தைக்கு அவர் விழித்திருப்பது போலவே தெரியும்.

By: Updated: March 1, 2019, 02:40:25 PM

குழந்தை வளர்ப்பு என்பது பெண்ணின் பொறுப்பு மட்டுமல்ல… அது தந்தைக்கும் உரித்தானது. பிரசவ காலத்திலும் அதற்குப் பின்னான நாட்களிலும் குழந்தையின் தந்தை உடனிருந்து குழந்தையை கவனிப்பது வெளிநாடுகளில் நடைமுறையில் உள்ளதுதான்.

குழந்தை வளர்ப்பில் தந்தைக்கும் பங்கு உண்டு. தந்தையின் அணைப்பும் அருகாமையும் குழந்தைக்கு உணர்வுரீதியான பாதுகாப்பை அளிக்கிறது. மிகச் சிறு குழந்தையாக இருக்கும்போது தாயுடன் தந்தையும் குழந்தை பராமரிப்பு வேலைகளை கவனித்துக் கொள்ளும்போது அது பெண்ணுக்கு மிகப்பெரிய ஆறுதல் அளிக்கிறது.

குழந்தை வளர்ப்பில் மிக முக்கியமான சில கடமைகள் தந்தைக்கு உள்ளன. அவற்றையெல்லாம் தெரிந்து கொண்டு பின்பற்றினால் வாழ்க்கை சுகம். சமூகத்துக்கு நல்ல குழந்தையை கொடுக்கலாம்.குழந்தையைத் தாயானவள் பார்த்துக்கொள்வதுபோல, குழந்தையின் தாயை நீங்கள் பத்திரமாக பார்த்துக்கொள்ள வேண்டும். உங்களது மனைவியையும் சேர்த்து நீங்கள் கவனிக்க வேண்டியது அவசியம். இதுவே முதல் கடமை.

குறிப்பாக வெளிநாடுகளில் குழந்தை பராமரிப்பதற்காகவே தந்தைகள் சிறப்பு வகுப்புகளுக்கு செல்வது வழக்கம். அப்படி செல்லும் சில தந்தைகள் சில ட்ரிக்குகளையும் தெரிந்துக் கொள்கிறார்கள். அந்த ட்ரிக்குகளை சரியான நேரத்தில் யூஸ் செய்துக் கொள்கிறார்கள்.

அப்படித்தான் சீனாவில் குழந்தையை பார்த்துக் கொள்ளும் தந்தை இரவில் விழித்து இருப்பது போலவே போலியான கண் ஸ்டிக்கரை ஒட்டிக் கொண்டு குழந்தையை தூங்க வைக்கிறார். கூடவே சேர்ந்து அவரும் உறங்குகிறார்.

ஆனால், திடீரென்று விழித்து பார்க்கும் குழந்தைக்கு அவர் விழித்திருப்பது போலவே தெரியும். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Viral News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Father paints fake eyes on eyelids while taking a power nap to trick baby

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X