ஒரு சிறுமி பள்ளியிலிருந்து தனது வகுப்புத் தோழனின் கோட்டை வீட்டுக்கு எடுத்துக்கொண்டு வந்ததால் தந்தை சிறுமியிடம் விசாரிக்கும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது.
ரன்யா சமாரா – எஹாப் ரஹ்மான் தம்பதியரின் மூன்று வயது மகள் மிலா. சிறுமி மிலா பள்ளி முடிந்து வீட்டுக்கு வரும்போது வழக்கத்துக்கு மாறாக இளஞ்சிவப்பு மற்றும் சாம்பல் நிற கோட்டுடன் வீட்டிற்கு வந்தபோது பெற்றோர் இருவரும் குழப்பமடைந்தனர். அது போல, குழந்தைக்கு ஒரு கோட் வாங்கித் தந்ததாக அவர்களுக்கு ஞாபகம் இல்லை.
சிறுமியின் பள்ளி பையில் இருந்த அந்த கோட்டைப் பார்த்த தந்தை இது யாருடையது என்று தனது மகளிடம் கேட்டு பதிலைப் பெறுகிறார். இந்த நிகழ்வு வீடியோவாக பதிவு செய்யப்பட்டு அது சமூக ஊடகங்களில் வைரல் ஆகி உள்ளது.
so mila came home from school today with a random jacket pic.twitter.com/bAnBo3NOUf
— آيه (@samaraa0) October 31, 2019
இந்த வீடியோவில், சிறுமியின் தந்தை மிலாவிடம் தொடர்ச்சியாக கேள்வி கேட்டு விசாரிக்கிறார். அதில் அனைவரும் ஆச்சரியப்படும் விதமாக சிறும் பதிலளிக்கிறார். தந்தை சிறுமிக்கு கோட் எங்கிருந்து கிடைத்தது என்று கேட்டபோது, அதற்கு சிறுமி “ஜாக்கெட் கடையில் இருந்து ஐந்து பணத்திற்கு வாங்கியதாக” கூறுகிறார். இந்த வீடியோவைப் பார்ப்பவர்கள் பலரும் சிறுமியின் பதில் வியக்கும்படியாக சமர்த்தாக உள்ளதால் வீடியோவை பகிர்ந்து கம்மென்ட் செய்ததால் வைரல் ஆகி உள்ளது.
இந்த கம்மென்ட்களுக்கு பதில் அளித்த சிறிமியின் தாய் அந்த கோட் திரும்ப ஒப்படைக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.