New Update
/indian-express-tamil/media/media_files/2025/06/14/1aD18OGnZR14CoGkqr7W.jpg)
அரை கிலோ கேக் ரூ.5 லட்சமா? தந்தையர் தின ஸ்பெஷல் கேக்! நெட்டிசன்கள் ஷாக்!
தந்தையர் தினத்திற்கு (Father’s Day) ரூ.5 லட்சத்தில் கேக் விற்பனை செய்யப்படுவதாக ஸ்கிரீன்ஷாட் ஒன்று இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், பெரும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.

நாளை (ஜூன் 15) தந்தையர் தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில், அதற்காக நபர் ஒருவர் ஆன்லைனில் கேக் ஆர்டர் செய்ய முயற்சித்து உள்ளார். அப்போது, ஒரு கேக் ரூ.5 லட்சத்திற்கு விற்பனை செய்யப்படுவதைக் கண்ட அவர், அதனை ஸ்கிரீன்ஷாட் செய்து இணையத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது, மிக வேகமாக வைரலாகி வருகிறது. அப்படி என்ன கேக்? அதற்கு ஏன் அவ்வளவு விலை? என்பது குறித்து இந்தப் பதிவில் விரிவாக பார்க்கலாம்.
— rajput (@rajputsingh9p) June 13, 2025
இணையத்தில் வைரலாகும் அந்த ஸ்கிரீன்ஷாட்டில் தந்தையர் தின சிறப்பு Hazelnut Chocolate Cake உள்ளது. தந்தையர் தினத்திற்காக விற்பனை செய்யப்படும் சிறப்பு கேக் வெறும் 500 கிராம் எடை ரூ.5 லட்சம் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் ஸ்கிரீன்ஷாட் இணையத்தில் வேகமாக பரவி வரும் நிலையில், நெட்டிசன்கள் பலரும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.