இது புதுசு! மனைவி விளையாட குழந்தையுடன் பார்த்து ரசித்த கணவர்

குழந்தை பிறந்தபிறகு சுமார் 13 மாதங்கள் கழித்து, சமீபத்தில் நெதர்லாந்துக்கு எதிரான போட்டியில் செரீனா வில்லியம்ஸ் வெற்றிபெற்றார்.

பெண்கள் வேலைக்காக நேர்காணல் செல்லும்போது “எப்போது திருமணம் செய்துகொள்ள போகிறீர்கள்?”, “குழந்தை எப்போது பெற்றுக்கொள்ள இருக்கிறீர்கள்?”, என்பதுபோன்ற கேள்விகளை மேலதிகாரிகள் நேரடியாக கேட்பதை தவிர்க்க முடிவதில்லை. ஐடி துவங்கி அனைத்து வேலைகளுக்கும் இதுதான் நிலைமை. திருமணம், குழந்தை என்றானபின் எப்படி வேலைக்கு செல்வது என்று யோசிக்கும் நிலைமையில் தான் இன்றும் பெண்களின் நிலைமை இருக்கிறது. தாங்கள் சாதிக்க நினைக்கும் துறைகளில், அதற்கான அனைத்து தகுதிகளும் இருந்தும், குழந்தை பிறந்தபிறகு தன் கனவுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடுகின்றனர் பல பெண்கள்.

ஆனால், டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸின் சமீபத்திய புகைப்படங்கள், குடும்பம், குழந்தையை காரணம் காட்டி கனவுகளை மறைக்கும் பெண்களுக்கும், அதே காரணத்தைக் காட்டி அவர்களை வீட்டுக்குள்ளேயே முடக்க நினைக்கும் ஆண்களுக்கும் பாடமாக அமைகிறது.

குழந்தை பிறந்தபிறகு சுமார் 13 மாதங்கள் கழித்து, சமீபத்தில் நெதர்லாந்துக்கு எதிரான போட்டியில் செரீனா வில்லியம்ஸ் வெற்றிபெற்றார்.

அவர் வெற்றிபெற்றதை விட மிக முக்கியமான விஷயம், அவரது குழந்தை ஒலிம்பியாவை கணவர் அலெக்சிஸ் ஒஹானியன் கைகளில் ஏந்தி போட்டியை பார்வையிட்டதுதான். பெரும்பாலும், விளையாட்டு துறையில் ஆண்கள் விளையாட அவர்களது மனைவிமார்கள் தங்கள் குழந்தையுடன் போட்டியை ரசிப்பதுதான் உலக வழக்கமாக இருந்தது.

ஆனால், தன் மனைவியின் கனவையும், லட்சியத்தையும் புரிந்துகொண்ட கணவர் அலெக்சிஸ் ஒஹானியன் குழந்தையை கவனித்துக்கொள்ளும் பொறுப்பை கையில் எடுத்திருக்கிறார். அதனால்தான், செரீனாவால் வெற்றிநடை போட்டு முன்னேற முடிகிறது.

Working mums,you see ! ????Iconic visuals of our times. ????????????♥️

A post shared by Mufasa✨???? (@masabagupta) on

அலெக்சிஸ் ஒஹானியனின் இந்த செயலுக்காக, பலரும் அவரை பாராட்டி வருகின்றனர்.

செரீனா வில்லியம்ஸ் – அலெக்சிஸ் ஒஹானியம் இணையருக்கு கடந்தாண்டு குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த பிறகுதான் இந்த ஜோடி கடந்த நவம்பர் மாதம் திருமணம் செய்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Viral news in Tamil.

×Close
×Close