வைரலாகும் வீடியோ: அப்பாவுக்கு தப்பாமல் பிறந்த குட்டி ரொனால்டோ!

கால்பந்தை கோல் கிப்பரை நோக்கி அடித்த ஜீனியர் ரொனால்டோ

கால்பந்து ரசிகர்களின்  ஃபேவரெட் ஹீரோவான கிறிஸ்டியானோ ரொனால்டோவும், அவரது செல்ல மகன் உடன் மைதானத்தில் கலக்கிய வீடியோ ஒன்று  இணையத்தில் வைரலாகி வருகின்றன.

உலகம் முழுவதும் இருக்கும் கால்பந்து ரசிகர்கள்  அதிக ஆர்வத்துடன் காத்திருக்கும்   ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷ்யாவில் வரும் 14ம் தேதி துவங்கி அடுத்த மாதம் 15ம் தேதி வரை நடைபெறுகிறது.   தங்களுக்கு பிடித்தமான கால்பந்து வீரர்கள் ஆடுவதை பார்க்க  அவரரின் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

குறிப்பாக போர்ச்சுகல் அணியின்  கிறிஸ்டியானோ ரொனால்டோவிற்கு   நாடு தாண்டி ரசிகர்கள்  ஏராளம்.   அவரைப்பார்ப்பதற்காக மைதானத்திற்குள் கூட்டம் அலை மோதும்.  போர்ச்சுகல் மற்றும் அல்ஜீரியா அணிகளுக்கு இடையேயான பயிற்சி ஆட்டம் சில தினங்களுக்கு முன்பு  நடந்தது.இந்த ஆட்டம் முடிந்ததும், ரொனால்டோவின் 7வயது மகன்  கிறிஸ்டியான்யின்ஹோ, தன் வயது சிறுவர்களுடன் மைதானத்தில் விளையாட குதித்தார்.

அப்போது முதலில்  மகனை பார்த்து சாதரணமாக சிரித்த ரொனால்டோ,  அவரை விளையாடும் படி கண் அடித்தார். தந்தையின் சொல்லுக்கு மறு பேச்சு உண்டோ. உடனே, கால்பந்தை கோல் கிப்பரை நோக்கி அடித்த ஜீனியர் ரொனால்டோ  அசத்தலாக கோல் அடித்தார்.

இந்த வீடியோ இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறார்.  புலிக்கு பிறந்தது பூனையாகுமா என்ன?

×Close
×Close