கப் அண்ட் பால் விளையாட்டில் ஒரு வயது சிறுவன் தனது தந்தையை தோற்கடிக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
மிக்கி நதானியேல் ஹட்சின்சன் எனும் ஒரு வயது சிறுவன், தனது தந்தை மிக்கி ஹட்சின்சனை விளையாட்டின் பல சுற்றுகளில் தோற்கடிப்பதை வீடியோவில் காணலாம்.
குழந்தை ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் பந்து இருக்கும் கோப்பையை துல்லியமாக கண்டறிவது பலரையும் ஆச்சரியப்படுத்தியது.
மிக்கி இந்த விளையாட்டை விளையாடுவது இதுவே முதல் முறை என்றும், மகனின் கவனம் மற்றும் துல்லியத்தைப் பார்த்து மகிழ்வுற்றதால் அதைப் படமாக்க முடிவு செய்ததாகவும் ஹட்சின்சன் டெய்லி மெயில் எனும் நாளிதழிடம் தெரிவித்தார்.
” பிறந்த சில மாதங்களில், அவருக்கு அற்புதமான நியாபக சக்தி, மோட்டார் திறன்கள் இருப்பதை நாங்கள் கவனித்தோம்,” என்றும் தெரிவித்தார்.
சமூக ஊடகங்களில் பந்தைக் கண்டுபிடிக்கும் குழந்தையின் திறனைக் கண்டு பாராட்டி வருகின்றனர்.
அவரின் தந்தை குழந்தை அளவு வேகமாக செயல்படவில்லை, குழந்தையின் செயல் அருமையாக உள்ளது, மிகவும் சாதூர்யமான குழந்தை உள்ளிட்ட கருத்துக்களை மக்கள் பதிவிட்டு வருகின்றனர்.