சமீப காலமாக சமூகவலைத்தளங்களில் கண்களை குழப்பம் விதமான ஆப்டிக்கல் இல்யூஷன் இமேஜ்கள் வைரலாக பரவி வருகிறது. ஒரு புகைப்படத்தில் நம் கண்களுக்குத் தெரியும் காட்சி, சிலருக்கு வேறு மாதிரியாகவும், கூர்ந்து கவனித்தால் முற்றிலும் வேறாகவும் தோன்றும்.சில வகை ஆப்டிக்கல் இல்யூஷன் ஓவியங்கள் அதனுள் மறைந்திருக்கும் ரகசியத்தை தேடி கண்டுபிடிக்க உங்களை தூண்டும் புதிர் விளையாட்டு போல் இருக்கும்.
Advertisment
அத்தகைய புகைப்படம் ஒன்று சமூகவலைத்தளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது. அதில் மறைந்திருக்கும் பாண்டாவை கண்டுபிடியுங்கள் என்கிற சவாலை இணையவாசிகள் முன்வைக்கின்றனர்.
இந்த புகைப்படத்தை ஹங்கேரி டிசைனர் Gergely Dudás வடிவைத்துள்ளார். ஸ்னோமேன் கூட்டத்தில் இருக்கும் பாண்டா கரடி உங்களுக்கு தெரிகிறதா? பலரும் பாண்டா கரடியை கண்டுபிடிக்க முடியவில்லை என்று தான், கமெண்ட் செஞ்சிருக்காங்க…
புகைப்படத்தை உன்னிப்பாக பார்த்தும் கண்டுபிடிக்க முடியாதவர்கள், கீழே பதிலை காணலாம்
புகைப்படத்தில் பச்சை நிற ஸ்கார்ப் அணிந்திருக்கும் ஸ்னோமேன் உங்கள் கண்ணுக்கு தெரிகிறதா, அதிலிருந்து வலது புறன் நான்கு ஸ்னோமேனுக்கு அடுத்து உங்களால் பாண்டா கரடியை கண்டுபிடிக்க முடியும்.
பாண்டாவை வெற்றிகரமாக கண்டுபிடித்தவர்கள், ஸ்னோமேன் கேரட்டை மூக்கு வைத்துள்ளார். எனவே, நீங்கள் மூக்கு இல்லாத ஸ்னோமேனை தேடி வந்தால், 20 விநாடியில் பாண்டாவை கண்டுபிடிக்கலாம் என கூறுகிறார்.
இந்த போட்டோவை உங்கள் நண்பர்களுக்கும் அனுப்பி சேலஞ்ச் செய்யுங்கள்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil