Advertisment

முடிந்தால் ஓவியத்தில் மறைந்திருக்கும் கரடியை கண்டுபிடியுங்கள்!

ஆப்டிக்கல் இல்யூஷன் புகைப்படம் ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதில் மறைந்திருக்கும் கரடியை உங்களால் கண்டுபிடிக்க முடிகிறதா?

author-image
WebDesk
New Update
முடிந்தால் ஓவியத்தில் மறைந்திருக்கும் கரடியை கண்டுபிடியுங்கள்!

சமீப காலமாக சமூகவலைத்தளங்களில் கண்களை குழப்பம் விதமான ஆப்டிக்கல் இல்யூஷன் இமேஜ்கள் வைரலாக பரவி வருகிறது.

Advertisment

ஒரு புகைப்படத்தில் நம் கண்களுக்குத் தெரியும் காட்சி, சிலருக்கு வேறு மாதிரியாகவும், கூர்ந்து கவனித்தால் முற்றிலும் வேறாகவும் தோன்றும்.

அத்தகைய புகைப்படம் ஒன்று சமூகவலைத்தளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது. அதிலிருக்கும் கரடியை கண்டுபிடியுங்கள் என்கிற சவாலை இமேஜை பகிரும் மக்கள் பதிவிட்டு வருகின்றனர்.

publive-image

அதில், வேட்டைக்காரர், பனி மூடிய காட்டிற்குள் முழங்காலை வளைத்தபடி கையில் துப்பாக்கியை தூக்கி பிடித்து, தனது இலக்கை நோக்கி காத்திருப்பது போன்ற காட்சி உள்ளது. அதில் மறைந்திருக்கும் கரடியை கண்டுப்பிடிப்பது தான் டாஸ்க் ஆகும். இந்த ஓவியத்தை ப்ளேபஸ்ஸால் (Play buzz) என்ற தளம் இணையத்தில் பகிர்ந்திருந்தது.

புகைப்படத்தை உன்னிப்பாக கவனித்தால் மட்டுமே, அதில் மறைந்திருக்கும் கரடியை கண்டுபிடிக்க முடியும். ஏனெனில், உங்களை குழப்புவதே ஆப்டிக்கல் இல்யூஷன் இமேஜ்கள் ஆகும். நீண்ட நேரம் தேடியும் கண்டுபிடிக்க முடியாதவர்கள், கீழே அதற்கான பதிலை கண்டறியலாம்.

வேட்டைக்காரர், பனிக்குவியல் என பல இடங்களில் தேடினாலும், வேட்டைக்காரருக்கு பின்னால் இருக்கும் பிரவுன் கலர் பனிக்குவியலை ஊற்றுப்பார்த்தால் கண்டறிந்துவிடலாம். ஆம்,
அதன் நிறம் மரப்பட்டையுடனும், புசு புசு தோற்றம் பனியுடனும் ஒத்துப்போகும் படி மறைத்து வைக்கப்பட்டுள்ளது. அதன் தலை வானத்தை நோக்கி கண்களை மூடியபடி உள்ளது.

publive-image

இந்தப் புகைப்படத்தில் மறைந்திருக்கும் கரடியை கண்டுப்பிடித்து விட்டால், உங்கள் நண்பர்களுக்கும் அனுப்பு சேலஞ்ச் செய்யுங்கள்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Social Media Viral
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment