எவை உண்மையான கண்கள்? முடிந்தால் கண்டுபிடியுங்கள்

பல கண்கள் உள்ள இந்த படத்தில் எவை உண்மையான கண்கள் என்பதை கண்டுபிடியுங்கள் பார்ப்போம்.

பல கண்கள் உள்ள இந்த படத்தில் எவை உண்மையான கண்கள் என்பதை கண்டுபிடியுங்கள் பார்ப்போம்.

author-image
WebDesk
New Update
எவை உண்மையான கண்கள்? முடிந்தால் கண்டுபிடியுங்கள்

சமீப காலமாக சமூகவலைத்தளங்களில் கண்களை குழப்பம் விதமான ஆப்டிக்கல் இல்யூஷன் இமேஜ்கள் வைரலாக பரவி வருகிறது. ஒரு புகைப்படத்தில் நம் கண்களுக்குத் தெரியும் காட்சி, சிலருக்கு வேறு மாதிரியாகவும், கூர்ந்து கவனித்தால் முற்றிலும் வேறாகவும் தோன்றும்.

Advertisment

அத்தகைய ஆப்டிக்கல் இல்யூஷன் இமேஜ்களுடன் கலையும் கலைந்துவிட்டால், விநோத முடிவுகள் கிடைக்கின்றன. அப்படியோரு போட்டோ தான் சமூக வலைதளத்தில் வைரலாகிவருகிறது.

வான்கூவரை சேர்ந்த மேக்கப் கலைஞரான மிமி சோய், தனது முகத்திலே ஆப்டிக்கல் இல்யூஷனை உருவாக்கி நெட்டிஸ்சன்களை குழப்பமடைய செய்துள்ளார்.

மேக்கப் திறமை மூலம் நிறைய காதுகள், கண்கள், மூக்கு, உதடுகள் ஆகியவற்றை முகத்தில் வரைந்து அசத்தியுள்ளார். இதில், உங்களால் உண்மையான கண்கள், மூக்கு, உதடு ஏது என்பதை கண்டறிய முடிகிறதா?

Advertisment
Advertisements
publive-image

அதை கண்டறிய முடியவில்லை என்றால், கவலை வேண்டாம். ஆயிரகணக்கான மக்களால் உண்மையான கண்களை கண்டறிய முடியாமல் குழப்பத்தில் இருந்தனர்.

இதுகுறித்து மிமி சோய் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "இது ஒப்பனை. உங்கள் உள்ளுணர்வை நம்புங்கள். நீங்கள் பைத்தியம் கிடையாது. நான் 3 முறை இந்த மாய தோற்றத்திற்கான மேக்கப் உடன் படுத்து உறங்கினேன். ஏனென்றால் என் தலையின் ஓரத்தில் வண்ணம் தீட்டுவதால் எனக்கு மயக்கம் மற்றும் குமட்டல் ஏற்பட்டது.

இதற்கு சுமார் 8 மணி நேரம் ஆனது. மேக்கப் கலையில் எனது வளர்ச்சியை பார்க்க 2015 மற்றும் 2016ம் ஆண்டுக்கான எனது பழைய விஷயங்களை எல்லாம் மீண்டும் உருவாக்க விரும்பினேன்” என குறிப்பிட்டுள்ளார்.

மற்றொரு வீடியோவை பார்த்தால், மிமி சோய் லிப்ஸ்டிக் பூசும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. பின்னர் தான் தெரிய வருகிறது, அவர் லிப்ஸ்டிக் பூசியது உதடுகளுக்கு அல்ல கண் இமைகளுக்கு என்பது நன்றாக தெரியும். இப்போது நீங்கள் எளிமையாக உண்மையான ஜோடி உறுப்புகளை கண்டறியலாம்.

சோயின் பல வித்தியாசமான மேக்கப் படைப்புகள் அவர் தூக்க முடக்கம் என்ற ஸ்லீப் பாராலிஸிஸின் போது கனவில் தோன்றிய காட்சிகளை கொண்டு உருவாக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை உங்கள் நண்பர்களுக்கும் அனுப்பு சேலஞ்ச் செய்யுங்கள்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Social Media Viral Viral Photo

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: