fire service men saved young boy life thiruchengodu bhavani river – ஆடி பெருக்கு நாளில் பவானி ஆற்றில் மூழ்கிய சிறுவன்! முதலுதவி செய்து காப்பாற்றிய அக்னி பகவான்கள்! (வீடியோ)
பவானி ஆற்றில் எப்போதுமே ஒரு மேற்பார்வையோடு உள்ளே இறங்குவது தான் சரியாக இருக்கும். இது கோவைவாசிகளில் பெரும்பாலானோர் நன்கு அறிவார்கள். மேட்டுப்பாளையத்தில் இருக்கும் பண்ணாரி அம்மன் கோவிலுக்குச் சென்று, குளிக்க முற்படும் போதும் சரி, ஏனைய தருணங்களிலும் சரி, உஷாராக இருக்க சொல்வது, பெற்றோர்களின் தலையாய கடமையாகவே மாறிவிட்டது. ஏன் என்றால் பவானியில் எப்போது தண்ணீர் அதிகம் திறந்துவிடப்படும் என்பது பலருக்கும் தெரியாத ஒன்றாக இருக்கும்.
சில நேரங்களில் முன்னறிவிப்பின்றி பவானி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும். இந்நிலையில் நேற்று பவானி ஆற்றில், ஆடி பெருக்கு நாளில் ( 03.08.19) மூழ்கிய சிறுவனை மயங்கிய நிலையில் மீட்டு முதலுதவி செய்து திருச்செங்கோடு தீயணைப்பு படை வீரர்கள் காப்பாற்றியுள்ளனர்.
தண்ணீரில் இருந்து காப்பாற்றுவது என்பது தீயணைப்பு வீரர்களுக்கு சாதாரணமான விஷயம் என்றாலும், சற்றும் தாமதிக்காமல் அச்சிறுவனுக்கு முதலுதவி செய்து அந்த வீரர்கள் காப்பாற்றியுள்ளனர். பிழைப்போமா மாட்டோமா என்று ஊசலாடிய அச்சிறுவனின் உயிரை காப்பாற்றி, அவன் பெற்றோர்களுக்கு வாழும் தெய்வமாகிய திருச்செங்கோடு தீயணைப்பு படை வீரர்களுக்கு நமது வாழ்த்துகள்!.