முதன்முறையாக விமானத்தில் செல்ல விமான நிலையம் சென்ற பெண்மணி ஒருவர் பதற்றத்தில் லக்கேஜ் செல்லும் ரோலரில் நடந்து சென்று தவறி விழுந்த வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.
Advertisment
விமானம் பயணம் என்பது எவ்வளவு ஜாலியோ அதே போல் கொஞ்சம் பயம் மற்றும் பதற்றத்தையும் தரக்கூடியது. அதிலும் முதன்முறையாக விமானத்தில் செல்பவர்கள் என்றால் கேட்கவே வேண்டாம். விமான நிலையத்தில் நுழைந்தது முதல் போட்டிங் பாஸ் வாங்கிக் கொண்டு ஃபலைட்டில் அமரும் வரை ஒருவிதமான பதற்றத்துடனே இருப்பார்கள்.
உள்ளே கொடுக்கும் இன்ஸ்டக்ஷன்களையும் ஒருவித பயத்துடனே கவனீப்பார்கள். இதெல்லாமே முதன் முறையாக விமானத்தில் செல்லுபவர்களுக்கு ஏற்படுவது சகஜம் தான். இதே போல் தான் துருக்கி விமான நிலையத்தில் முதன்முறையாக சென்ற பெண் ஒருவர், லக்கேட்ஜ் வைக்கும் போது சிறிய பதற்றத்தில் லக்கேட்ஜ் செல்லும் ரோலரில் ஏறிவிட்டார்.
பின்னர் அதில் பேலன்ஸ் செய்ய முடியாமல் கால் தவறி கீழே விழுந்தார். பின்னர், அங்கிருந்த விமான பணிப்பெண்கள் அந்த மிஷினை ஆஃப் செய்தனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது