ஆந்திராவில் மீனவர் வலையில் ஒரு மிகப்பெரிய ராட்சத சுறாமீன் சிக்கியிருக்கிறது கரைக்கு கொண்டுவரப்பட்ட அந்த சுறா மீனைத் தூக்க முடியாததால் கிரேன் வச்சு தூக்கி இருக்கிறார்கள். 1,500 கிலோ எடை கொண்ட ராட்சத மீனை கிரேன் வைத்து தூக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கிருஷ்ணா மாவட்டம், மச்சிலிப்பட்டினத்தில் உள்ள கிலகலாதிண்டியில், மூன்று நாட்களுக்கு முன் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் உள்ளூர் மக்களால் தேக்கு மீன் என்று அழைக்கப்படும் ராட்சத சுறா மீனைப் பிடித்துக்கொண்டு திரும்பினர். சுமார் 1,500 கிலோ எடையுள்ள ராட்சத டெக்கு மீனைப் பார்த்து அனைவரும் வியந்தனர்.
கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது வலையில் பெரிய மீன் சிக்கியதைக் கண்டு அதிர்ச்சியடைந்த மீனவர்கள், பிறகு அனைவரும் ஒன்றினைந்து அதை கரைக்கு கொண்டு வர உதவினர். ராட்சத மீனை வெளியே எடுக்க கிரேன் வரவழைக்கப்பட்டது. கிரேன் மூலம் ராட்சத தேக்கு மீனை தூக்கும்போது, அப்பகுதி மக்கள் ஏராளமானோர் திரண்டு பார்வையிட்டனர்.
Giant whale shark caught by fishermen in Andhra Pradesh's Machilipatnam.
— Vani Mehrotra (@vani_mehrotra) July 29, 2024
The whale shark weighed approximately 1,500 kgs. It was later purchased by some traders in Chennai. #AndhraPradesh pic.twitter.com/XefJgcZvfs
கிரேனில் சுறா மீன் தூக்கப்படுவதைப் ஆர்வத்துடன் பார்த்த கிராம மக்கள் தங்கள் மொபைல் போன்களில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து ஆச்சரியப்பட்டனர். மிகப்பெரிய தேக்கு மீன் கிரேன் மூலம் தூக்கப்பட்ட வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஆந்திராவில் மீனவர்களால் பிடிக்கப்பட்ட இந்த ராட்சத சுறா மீனை சென்னையை சேர்ந்த வியாபாரி ரூ. 4 லட்சத்துக்கு வாங்கியதாக கூறப்படுகிறது. 2020-ம் ஆண்டில், ஏறக்குறைய மூன்று டன் எடையுள்ள ஒரு ராட்சத ஸ்டிங்ரே மீன், அதே மாவட்டத்தில் மீனவர்களால் பிடிக்கப்பட்டது.
ஆந்திராவில் மீனவர் வலையில் ஒரு மிகப்பெரிய ராட்சத சுறாமீன் சிக்கியிருக்கிறது கரைக்கு கொண்டுவரப்பட்ட அந்த சுறா மீனைத் தூக்க முடியாததால் கிரேன் வச்சு தூக்கி இருக்கிறார்கள். 1,500 கிலோ எடை கொண்ட ராட்சத மீனை கிரேன் வைத்து தூக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
1.5 ton fish
— P Pavan (@PavanJourno) July 28, 2024
Fishermen, who ventured into sea at Gilakaladindi in Machilipatnam 3 days ago, returned with a 1500 kgs fish. The teku fish was brought out with help of a crane.
Traders from Chennai are reported to have bought it from the Fishermen.#AndhraPradesh pic.twitter.com/B43tnMQxxr
கிருஷ்ணா மாவட்டம், மச்சிலிப்பட்டினத்தில் உள்ள கிலகலாதிண்டியில், மூன்று நாட்களுக்கு முன் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் உள்ளூர் மக்களால் தேக்கு மீன் என்று அழைக்கப்படும் ராட்சத சுறா மீனைப் பிடித்துக்கொண்டு திரும்பினர். சுமார் 1,500 கிலோ எடையுள்ள ராட்சத டெக்கு மீனைப் பார்த்து அனைவரும் வியந்தனர்.
கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது வலையில் பெரிய மீன் சிக்கியதைக் கண்டு அதிர்ச்சியடைந்த மீனவர்கள், பிறகு அனைவரும் ஒன்றினைந்து அதை கரைக்கு கொண்டு வர உதவினர். ராட்சத மீனை வெளியே எடுக்க கிரேன் வரவழைக்கப்பட்டது. கிரேன் மூலம் ராட்சத தேக்கு மீனை தூக்கும்போது, அப்பகுதி மக்கள் ஏராளமானோர் திரண்டு பார்வையிட்டனர்.
கிரேனில் சுறா மீன் தூக்கப்படுவதைப் ஆர்வத்துடன் பார்த்த கிராம மக்கள் தங்கள் மொபைல் போன்களில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து ஆச்சரியப்பட்டனர். மிகப்பெரிய தேக்கு மீன் கிரேன் மூலம் தூக்கப்பட்ட வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஆந்திராவில் மீனவர்களால் பிடிக்கப்பட்ட இந்த ராட்சத சுறா மீனை சென்னையை சேர்ந்த வியாபாரி ரூ. 4 லட்சத்துக்கு வாங்கியதாக கூறப்படுகிறது. 2020-ம் ஆண்டில், ஏறக்குறைய மூன்று டன் எடையுள்ள ஒரு ராட்சத ஸ்டிங்ரே மீன், அதே மாவட்டத்தில் மீனவர்களால் பிடிக்கப்பட்டது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.