வீடியோ: புர்காவுடன் பொது இடத்தில் நடனமாடிய பெண்கள்: முஸ்லிம் மதத்திற்கு எதிரானது என எதிர்ப்பு

கேரள மாநிலம் மலப்புரத்தில் புர்கா அணிந்த 3 பெண்கள் திடீரன சாலையின் மையப்பகுதிக்கு வந்து பிரபலமான ‘ஜிமிக்கி கம்மல்’ பாடலுக்கு நடனமாடினர்.

கேரளாவில் 3 முஸ்லிம் பெண்கள் பொது இடத்தில் திடீரென நடனமாடியதற்கு கடும் எதிர்ப்பும் ஆதரவும் கிளம்பியுள்ளது.

கேரள மாநிலம் மலப்புரத்தில் உள்ள கோட்டக்குன்னு பகுதியில் பல்வேறு கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்துகொண்ட எய்ட்ஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது, புர்கா அணிந்த 3 பெண்கள் திடீரன சாலையின் மையப்பகுதிக்கு வந்து பிரபலமான ‘ஜிமிக்கி கம்மல்’ பாடலுக்கு நடனமாடினர்.

இந்த வீடியோ, வாட்ஸ் ஆப், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. இந்நிலையில், முஸ்லிம் பெண்கள் பொது இடத்தில் இவ்வாறு நடனமாடுவது, அவர்களின் மத நம்பிக்கைக்கு எதிரானது என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதேசமயம், பொது இடத்தில் தைரியமாக ஆடிய அந்த பெண்களுக்கு பலரும் ஆதரவையும், வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.

×Close
×Close