நாக்பூரை சேர்ந்த தொலைக்காட்சி நடிகரான பராஸ் கல்நாவட், பிளிக்கார்ட் தளத்தில் nothing நிறுவனத்தின் இயர்ஃபோன் ஆர்டர் செய்துள்ளார். இந்நிலையில், அவருக்கு டெலிவரியான பாக்ஸ் காலியாக இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “பிளிக்கார்ட்டில் ஆர்டர் செய்த nothing நிறுவன பாக்ஸில் எதுவுல் இல்லை. மிகவும் மோசமான ஆன்லைன் ஷாப்பிங் தளமாக பிளிப்கார்ட் மாறிவிட்டதாகவும்,மக்கள் கூடிய விரைவில் அதில் பொருள்கள் வாங்குவதை நிறுத்தப்போகிறார்கள்” என பதிவிட்டுள்ளார்.
So Here I Have Received Nothing In @nothing box From @Flipkart ! Flipkart is actually getting worse with time and soon people are going to stop purchasing products from @Flipkart ! pic.twitter.com/wGnzU0MlNq
— Paras Kalnawat (@paras_kalnawat) October 13, 2021
இவரின் பதிவுக்கு பிளிப்கார்ட் நிறுவனம் உடனடியாக பதில் அளித்துள்ளது. அந்நிறுவனம், “இதைக் கேட்டு வருந்துகிறோம். ஆர்டர் குறித்து உங்களது கவலையைப் புரிந்துகொள்கிறோம். உங்களுக்கு உதவ தயாராக இருக்கிறோம். ஆர்டர் ஐடியை ஷெர் செய்யுங்கள்” என தெரிவித்துள்ளது.
பராஸ் கல்நாவட் பதிவிற்கு, பல இணையவாசிகள் ஆர்டரில் தங்களுக்கு ஏற்பட்ட மோசமான சம்பவங்கள் ரிப்ளை செய்து வருகின்றனர். ஆன்லைன் தளங்களில் ஆர்டர் செய்பவர்களுக்கு தவறான பொருள்கள் வருவது இது முதல் முறை அல்ல. பல மக்களுக்கு ஆர்டர் செய்ததற்குப் பதிலாக செங்கல், சோப், ஆப்பிள் போன்றவை வந்த சம்பவங்கள் நிகழ்ந்திருக்கிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil