New Update
/tamil-ie/media/media_files/uploads/2020/10/python-mustang-engine.jpg)
Florida wildlife officials rescue 10-foot-long python from Mustang engine
சரி சொல்லுங்க இப்படி ஒரு சூழல் வந்தா நீங்க என்ன செய்வீங்க?
Florida wildlife officials rescue 10-foot-long python from Mustang engine
காரின் ஹூடை நாம் பல்வேறு காரணங்களுக்காக திறப்போம். திடீரென ஒரு ப்ரேக்டவுன் ஆனாலும் கூட, நமக்கு மெக்கானிக் வேலை தெரியாது என்றாலும் அதனை திறந்து வைத்துவிட்டு யாரிடமாவது போனில் பேசி அறிவுரை கேட்டுக் கொண்டிருப்போம். நீங்கள் அப்படி திறக்கும் போது அங்கே ஒரு 10 அடி நீளத்தில் பர்மீஸ் மலைப்பாம்பு உறங்கிக் கொண்டிருந்தால் எப்படி இருக்கும்?
வடக்கு மியாமியில் உள்ள டானியா கடற்கரையில் நீல நிற ஃபோர்ட் மஸ்டங்க் கார் ரிப்பேர் பார்க்க கொடுக்கப்பட்டிருக்கிறது. விடாமல் எஞ்சின் லைட் எரிந்து கொண்டிருக்கிறது என்பதால் வாகனத்தின் உரிமையாளர் அதனை அங்கே கொண்டு வந்து கொடுத்துள்ளார். அவர்களின் அசாத்திய முயற்சியும் தோல்வி அடைந்திருக்கிறது. காரணத்தை அறிந்து கொண்ட அவர்கள் உடனே ஃப்ளோரிடா ஃபிஷ் மற்றும் வனத்துறை பாதுகாப்பு கமிஷனிற்கு போன் செய்து விசயத்தை கூறியுள்ளனர்.
எஞ்சினுக்கு அருகே மிக நீளமான மலைப்பாம்பு ஒன்றினை வனத்துறையினர் அந்த காரில் இருந்து தூக்கி சாக்குப் பையில் வைத்து கொண்டு சென்றுள்ளனர். பாம்பை மீட்கும் காட்சி சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. பலரும், அய்யயோ, என்னோட காரா இருந்தா வித்துட்டு வந்துருப்பேன்... எரிச்சுருப்பேன்... நான் போய் முதல்ல என் கார் எஞ்சினை செக் பண்றேன்னு பலரும் ரியாக்ட் செய்துள்ளனர். சரி சொல்லுங்க இப்படி ஒரு சூழல் வந்தா நீங்க என்ன செய்வீங்க?
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.