New Update
/indian-express-tamil/media/media_files/Udi24OajdNIY0WgEX5bY.jpg)
அதிக அன்பு குழந்தைகளை அழித்துவிடும். பெற்றோர் குழந்தைகளுக்கு எவ்வளவு செல்லம் கொடுக்க வேண்டும், கண்டிக்க வேண்டும் என்று அறிந்திருக்க வேண்டும் நெட்டிசன்கள் விமர்சனம்
கோயில் முன் பூ விற்கும் தாய் ஐபோன் கேட்டு அடம்பிடித்து 3 நாள் சாப்பிடாமல் பட்டினி இருந்த தன் மகனுக்கு அதை விலை உயர்ந்த ஐபோனை வாங்கி கொடுத்துள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில வைரலாகி வருகிறது. இதற்கு பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர். கட்டுக்கட்டான பணத்தை அவர் கொடுக்க கடைக்காரர் அவருக்கு ஐபோன் கொடுக்கிறார்.
ஐபோன் வாங்கிய கடையைச் சேர்ந்தவர் இதை வீடியோ பதிவு செய்துள்ளார். இதுகுறித்து அந்த தாயிடம் பேட்டி எடுத்துள்ளார். அதில் அவர், நான் ஒரு கோயிலுக்கு வெளியே பூ விற்கிறேன். என் மகன் தனக்கு ஐபோன் வேண்டும் என அடம்பிடித்து 3 நாட்களாக எதுவும் சாப்பிடவில்லை. மகன் சாப்பிடாமல் இருந்ததால் அவனுக்கு நான் ஐபோன் வாங்க பணம் கொடுத்தேன் என்றார்.
This nithalla boy stopped eating food and was demanding iPhone from her mother.
— Incognito (@Incognito_qfs) August 18, 2024
His mother finally relented and gave him money to buy iPhone. She sells flowers outside a mandir.
Too much love will always destroy children. Parents should know where to draw the line.
This is… pic.twitter.com/govTiTKRAF
மேலும், இந்த பணத்தை மகன் சம்பாதித்து எனக்கு திரும்பித் தர வேண்டும் என்றும் அவர் கூறினார். இருப்பினும் இதற்கு நெட்டிசன்கள் விமர்சனம் செய்து வருகின்றனர். அதிக அன்பு குழந்தைகளை அழித்துவிடும். பெற்றோர் குழந்தைகளுக்கு எவ்வளவு செல்லம் கொடுக்க வேண்டும், கண்டிக்க வேண்டும் என்று அறிந்திருக்க வேண்டும் என்று ஒரு பயனர் கூறியுள்ளார்.
"அவர் அம்மாவை நினைத்து பரிதாபப்படுகிறேன். இவ்வளவு பணம் சம்பாதிக்க அவன் அம்மா எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பார். இது கூட அவனுக்கு தெரியவில்லை" என்று மற்றொரு X பயனர் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.