New Update
/tamil-ie/media/media_files/uploads/2021/07/flying-cars_1200_twt.jpg)
இந்த கார் பெட்ரோலில் இயங்கும், பி.எம்.டபிள்யூ எஞ்சின் கொண்டதாகும். ஆனாலும் 8200 அடி உயரத்தில் 1000 கி.மீ வரை பயணிக்கும் திறன் கொண்டது.
viral video of Flying car takes successful inter-city test run, netizens thrilled : தொழில்நுட்பத்தில் அடுத்து என்ன நடக்கும் என்று நமக்கு பல வகைகளிலும் ஆச்சரியத்தை தர விஞ்ஞானிகள் ஒரு போதும் மறுப்பதில்லை. அந்த வகையில் தற்போது பறக்கும் கார் ஒன்றை அறிமுகம் செய்து நம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளனர் ஆராய்ச்சியாளர்கள்.
பி.பி.சி. அறிக்கையின் படி, இந்த கார் பெட்ரோலில் இயங்கும், பி.எம்.டபிள்யூ எஞ்சின் கொண்டதாகும். ஆனாலும் 8200 அடி உயரத்தில் 1000 கி.மீ வரை பறந்து கொண்டே பயணிக்கும் கார் என்று கூறியுள்ளனர். நீங்கள் ஒரு இரண்டு நிமிடங்கள்15 நொடி காத்திருந்தால் உங்கள் கார் பறக்கும் காராக மாறும் அதிசயத்தை உணர முடியும்.
ஸ்லோவாக்கியாவில் உள்ள இரண்டு விமான நிலையங்களுக்கு (நித்ரா, ப்ரடிஸ்லாவா) இடையே ஜூன் 28ம் தேதி அன்று 35 நிமிடங்கள் பயணித்து இந்த சாதனையை புரிந்துள்ளது ஏர்கார் (AirCar). மணிக்கு 190 கி.மீ வேகத்தில் பயணிக்க இருக்கும் இந்த கார் தான் இனி வருங்கால தொழில்நுட்பமாக இருக்கும்.
இந்த கார் குறித்து பலரும் தங்களின் கருத்துகளை பதிவு செய்துள்ளனர். இந்த கார் குறித்தும் இந்த தொழில்நுட்பம் குறித்தும் உங்களின் கருத்து என்ன என்பதை எங்களுக்கு கீழே கமெண்ட்டில் தெரிவிக்கவும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.