Flying deer leaves internet stunned : மானாடும், ஓடும், தவ்வும் என்று எல்லாம் நாம் பார்த்திருக்கின்றோம். கேள்விப்பட்டிருக்கின்றோம். ஏன் குறைக்கும் மான், கடிக்கும் மானெல்லாம் கூட இருக்கிறதாம். ஆனால் பறக்கும் மான் பாத்துருக்கீங்களா…? இதுவரைக்கும் பாத்ததில்லைன்னா இதோ இப்ப பாத்துக்கங்க… ட்விட்டரில் வைரலாகி வரும் இந்த வீடியோ தான் தற்போது சமூக வலைதளங்களின் ஹாட் டாபிக்கா இருக்குதுன்னா பாத்துக்கங்க.
WildLense Eco Foundation வெளியிட்டிருக்கும் இந்த வீடியோவில், கம்மா கரையில் இருந்து ஓடி வரும் ஒரு மான் ஒரு சாலையை நடந்து கடப்பதற்கு பதிலாக பறந்தே கடந்துவிட்டது. மின்னல் வேகத்தில் அந்த மான் ஒரு ஆள் உயரத்திற்கு பறந்து அடுத்த பக்கத்தில் உள்ள காட்டுக்குள் புகுந்துவிட்டது.
உயரம் தாண்டும் போட்டியில் முதலிடம் பிடித்த வீரர்…. என்ற கேப்ஷனுடன் வெளியிடப்பட்டிருக்கும் இந்த வீடியோவை இதுவரை 80 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பார்வையிட்டுள்ளனர்.
ட்விட்டரில் இந்த வீடியோவை பார்க்கும் போதே மெய்சிலிர்க்கிறது, நிஜத்தில் இதை பார்த்தவர் நிச்சயமாக வாழ்நாளிலும் இத்தகைய நிகழ்வை மறக்கவே மாட்டார். நம்மைப் போன்றே ஆஆஆவென்று இந்த வீடியோவை பார்த்த பலரும் தங்களின் கருத்துகளை இந்த வீடியோவின் கீழ் பதிவிட்டு வருகின்றனர்.