New Update
/indian-express-tamil/media/media_files/2025/04/02/MjDQXI7qnlafDxe1twt9.jpg)
உலக பணக்காரர்கள் பட்டியலில் எலான் மஸ்க் முதலிடம் பிடித்துள்ளதாக ஃபோர்ப்ஸ் பத்திரிகை குறிப்பிட்டுள்ளது. இந்த பட்டியலில் முகேஷ் அம்பானி 18-வது இடத்திலும், அதானி 28-வது இடத்திலும் உள்ளனர்.
ஃபோர்ப்ஸ் பத்திரிகையின் உலக பணக்காரர்கள் பட்டியல் 2025: உலகளாவிய வணிகத் தலைவர்கள் மற்றும் தொழில்முனைவோர், தங்கள் தொழிலில் புதுமை மற்றும் மூலோபாய தொலைநோக்கு திட்டங்கள் மூலமாக தங்கள் சொத்து மதிப்பை கணிசமாக உயர்த்தியுள்ளனர். இதன் மூலம் அவர்கள் உலக பணக்காரர்கள் பட்டியலில் இணைந்துள்ளனர். 342 பில்லியன் டாலர் நிகர மதிப்புடன், ஃபோர்ப்ஸ் பத்திரிகையின் உலக பணக்காரர்கள் பட்டியலில் எலான் மஸ்க் முதலிடம் பிடித்துள்ளார்.
ஆங்கிலத்தில் படிக்கவும்: Top 10 richest people in 2025: Where do India’s wealthiest rank on Forbes’ Billionaires list?
மெட்டா நிறுவனரான மார்க் ஜுக்கர்பெர்க், ஏறத்தாழ 216 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் முதல்முறையாக 2-வது இடத்திற்கு உயர்ந்துள்ளார். அமேசானின் ஜெஃப் பெசோஸ் மூன்றாவது இடத்திலும், ஆரக்கிளின் லாரி எலிசன் நான்காவது இடத்திலும் இருக்கின்றனர். இதன் ஐந்தாவது இடத்தில் பெர்னார்ட் ஆர்னால்ட் குடும்பத்தினர் இருக்கின்றனர்.
உலக அளவில் 3,028 பில்லியனர்களில், 406 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இது, ஒட்டுமொத்த அளவில் 13.4 சதவீதம் ஆகும். கடந்த 2024-ஆம் ஆண்டு இதன் அளவு 13.3 சதவீதம் ஆக இருந்தது. அந்த வகையில் உலக பணக்கார பெண்களின் வரிசையில், வால்மார்ட்டின் ஆலிஸ் வால்டன் முதன்மையான இடம் இருக்கிறார்.
குறிப்பிடத்தக்க வகையில், பில்லினியர்கள் பட்டியலில் அமெரிக்கர்கள் ஆதிக்கம் செலுத்துகின்றனர். அதன்படி, 902 பேர் இதில் இடம்பெற்றுள்ளனர். அடுத்தபடியாக, 516 பேருடன் சீனர்கள் இரண்டாம் இடம் பிடித்துள்ளனர். 205 நபர்களுடன் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது.
சமீபத்திய தரவரிசை மற்றும் நிகர மதிப்பின் கீழ், உலகெங்கிலும் உள்ள 3,028 பேர் இந்த ஆண்டு ஃபோர்ப்ஸ் பத்திரிகையின் வருடாந்திர உலக பில்லியனர்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ளனர். இந்நிலையில், ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவரான முகேஷ் அம்பானி இந்தப் பட்டியலில் சரிவை சந்தித்து 92.5 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் 18-வது இடத்தில் இருக்கிறார். அடுத்ததாக, அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானி உலகளவில் 56.3 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் 28-வது இடத்தில் உள்ளார்.
- Cherry Gupta
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.