/tamil-ie/media/media_files/uploads/2020/02/New-Project-2020-02-18T145407.906.jpg)
vijay let me sing a kutti story song, லெட் மி சிங் ய குட்டி ஸ்டோரி, வெளிநாட்டு மாணவர்கள் டான்ஸ், விஜய், மாஸ்டர், foreign students dance for vijay song, foreigners dance for kutti story song, viral video, vijay master movie, let me sing a kutti story song viral video
நடிகர் விஜய் நடித்துவரும் மாஸ்டர் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள “லெட் மி சிங் ய குட்டி ஸ்டோரி” பாடலுக்கு வெளிநாட்டு மாணவர்கள் வகுப்பறையில் நடனம் ஆடிய வீடியோ இணையத்திலும் சமூக ஊடகங்களிலும் வைரலாகி வருகிறது.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்கும் மாஸ்டர் படத்தில் இடம் பெற்றுள்ள “லெட் மி சிங் ய குட்டி ஸ்டோரி” பாடல் சிங்கில் டிராக் பிப்ரவரி 14-ம் தேதி காதலர் தினத்தன்று வெளியிடப்பட்டது. அந்தப் பாடல் வெளியிடப்பட்ட சில நிமிடங்களிலேயே விஜய் ரசிகர்களால் பரப்பப்பட்டு சமூக ஊடகங்களில் வைரலானது.
விஜய்யின் மாஸ்டர் படத்துக்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். “லெட் மி சிங் ய குட்டி ஸ்டோரி” பாடலை பாடலாசிரியர் அருண்ராஜா காமராஜ் எழுதியுள்ளார். இந்த பாடலை ஒன்றரை கோடி பேர்களுக்கு மேல் யூடியூப்பில் பார்த்துள்ளனர். மேலும், இந்தப் பாடல் இளைஞர்கள் பலரின் காலர் டியூனாகவும் ரிங்டோனாகவும் மாறி பிரபலமாகியுள்ளது.
இந்த நிலையில், வெளிநாட்டு வகுப்பறை ஒன்றில் மாணவர்கள் விஜய்யின் “லெட் மி சிங் ய குட்டி ஸ்டோரி” பாடலுக்கு அமர்ந்தபடி ஹேப்பியாக டான்ஸ் ஆடியுள்ளனர். அந்த வீடியோவை இசையமைப்பாளர் அனிருத் தன் டுவிட்டர் பக்கத்தில் குட்டி ஸ்டோர் உலகம் முழுவதும் என குறிப்பிட்டு பகிர்ந்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, விஜய்யின் மாஸ்டர் படத்தில் இடம்பெற்றுள்ள “லெட் மி சிங் ய குட்டி ஸ்டோரி” பாடலுக்கு வெளிநாட்டு மாணவர்கள் டான்ஸ் ஆடியுள்ள வீடியோ இணையத்திலும் சமூக ஊடகங்களிலும் வைரலாகிவருகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.