வனத்துறையினர் யானை மீது சவாரி செய்தபடி ரோந்து வரும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பகிர்ந்த ஐ.எஃப்.எஸ் அதிகாரி, நீரிலும் நிலத்திலும் இதைவிட திறமையான செல்லும் வாகனத்தைப் பார்த்திருக்கிறீர்களா என்று கேட்டுள்ளார்.
வனங்களே பூமியில் உயிரினங்களைக் காப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. வனங்கள் இல்லாவிட்டால், இந்த பூமி வாடிப்போய் பாலையாகிவிடும். வனங்கள் வனவிலங்குகளுக்கானது மட்டுமல்ல, மனிதர்களுக்கானதும்தான். ஆனால், மனிதர்கள் வனங்களுக்குள் சென்று வனவிலங்குகளை தொந்தரவு செய்து வனத்தை அழிக்கக் கூடாது. வனத்திற்கு எதிரான, வனவிலங்குகளுக்கு எதிரான வேலைகளை வனத்தில் வாழும் பழங்குடிகள் செய்வதில்லை. மாறாக வெளியே இருந்து செல்லும் நபர்களாலேயே அதிகம் நடக்கிறது.
நம் நாட்டில் வனத்தைப் பாதுகாப்பதில் வனத்துறையின் பங்கு மிகவும் முக்கியமானது. காடுகளில் உள்ள மரங்களை மட்டுமல்ல, காடுகளில் உள்ள விலங்குகளை மனிதர்களால் வேட்டையாடாமல் பாதுகாக்கும் பணியையும் வனத்துறையினரே மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், ஐ.எஃப்.எஸ் அதிகாரிகள் சமூக வலைதளங்களில் காடுகள் மற்றும் வனவிலங்குகளைப் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். இந்த வீடியோக்கள் பார்வையாளர்கள் மத்தியில் வியப்பையும் வனவிலங்குகளைப் பற்றிய புரிதலையும் ஏற்படுத்துகின்றன.
Have you seen more efficient All Terrain Vehicles than these?
— Saket Badola (@Saket_Badola) August 27, 2024
And have you ever truly appreciated the role of #GreenSoldiers in saving our forest and wildlife?
If no, then the time is NOW. 👏🏻#OrangTigerReserve #Assam
VC: Forest Department pic.twitter.com/fuvPKZPdY4
அந்த வரிசையில், வனத்துறையினர் நீர் நிறைந்த பகுதியில் யானை மீது அமர்ந்தபடி ரோந்து செல்லும் வீடியோவை ஐ.எஃப்.எஸ் அதிகாரி சாகேத் படோலா தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ வனத்துறையினரின் கடுமையான பணியையும் அதில் ஈடுபடுத்தப்படும் யானைகளின் திறமையையும் அங்கீகரிக்கும் விதமாக உள்ளது.
இந்த வீடியோவில், ஆள் உயரத்திற்கும் ஆழம்கொண்ட தண்ணீர் நிறைந்த பகுதியில், வனத்துறையினர் யானை மீது ரோந்து செல்வது இடம் பெற்றுள்ளது. இது மிகவும் கடினமான பணி. வாகனங்களில் செல்ல முடியாத பகுதிகளில் யானைகள்தான் பயன்படுத்தப்படுகின்றன.
இந்த வீடியோ குறித்து ஐ.எஃப்.எஸ் அதிகாரி சாகேத் படோலா தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிடுகையில், “இவற்றை (யானைகள்) விட திறமையான அனைத்து நிலப்பரப்பிலும் செல்லும் வாகனங்களை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? நமது காடு மற்றும் வனவிலங்குகளை காப்பாற்றுவதில் பசுமை வீரர்கள் பங்கை நீங்கள் எப்போதாவது உண்மையிலேயே பாராட்டியிருக்கிறீர்களா? இல்லை என்றால், இப்போது அதற்கான நேரம் பாராட்டுங்கள்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த வீடியோ அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ள ஓரங் தேசியப் பூங்காவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அங்கே வனத்துறையினர், நீர் நிறைந்த ஆழமான பகுதியில் யானை மீது அமர்ந்து ரோந்து செல்லும் காட்சியைப் பார்க்கும் நெட்டிசன்கள் வனத்துறையினரைப் பாராட்டி வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.