Advertisment

நீர்ப்பாசனக் கால்வாயில் குட்டியுடன் சிக்கிய யானை; புத்திசாலித் தனமாக மீட்ட வனத்துறை: வைரல் வீடியோ

இந்த வைரல் வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் யானையையும் அதன் குட்டியையும் புத்திசாலித்தனமாகக் காப்பாற்றிய வனத்துறையினரின் பணியைப் பாராட்டிப் புகழ்ந்து வருகின்றனர்.

author-image
WebDesk
New Update
elephant and calf

நீர்ப்பாசனக் கால்வாயில், மழைபொழிவின்போது, குட்டியுடன் சிக்கிகொண்ட யானையை வனத்துறையினர் புத்திசாலித்தனமாக மீட்ட வீடியோ

வனத்துறையின் வேலை வனங்களைப் பாதுகாப்பது மட்டுமல்ல, வனவிலங்குகளைப் பாதுகாப்பதும்தான். ஏனென்றால், வன விலங்குகள் இல்லையென்றால், நாளடைவில் வனமும் இல்லாமல் போய்விடும். காடுகளை விதைப்பது யானைகள் என்றுதான் சொல்வார்கள். 

Advertisment

வனத்துறையின் வனவிலங்குகளைப் பாதுகாப்பதில் மிகவும் சிரத்தையுடன், சில நேரங்களில் ரிஸ்க் எடுத்து செயல்பட்டு வனவிலங்குகளை மீட்கும் பணியை செய்து முடிப்பார்கள். அப்படி, வனவிலங்குகளைப் பாதுகாக்கும் மீட்பு பணிகளை ஐ.எஃப்.எஸ் அதிகாரிகள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வனத்துறையினரின் பணிகளைப் பற்றியும் வனவிலங்குகளைப் பற்றியும் தெரிவிக்கும் விதமாக வீடியோக்களைப் பகிர்வதுண்டு.

அந்த வகையில், நீர்ப்பாசனக் கால்வாயில், மழைபொழிவின்போது, குட்டியுடன் சிக்கிகொண்ட யானையை வனத்துறையினர் புத்திசாலித்தனமாக மீட்ட வீடியோ ஒன்றை ஐ.எஃப்.எஸ் அதிகாரி சுசந்தா நந்தா தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அந்த வீடியோவில், ஒரு நீர்ப்பாசனக் கால்வாயில் மழைநீர் வெள்ளமாக ஓடுகிறது. அந்த கால்வாயில் எப்படியோ ஒரு யானை தனது குட்டியுடன் இறங்கி சிக்கிக்கொண்டு மேலே ஏறமுடியாமல் திணறுகிறது. இதைப் பார்த்த வனத்துறையினர் தூரத்தில் கால்வாயில் மண்ணை நிரப்பி யானையும் அதன் குட்டியும் எளிதாக மேலே ஏறிச்செல்ல ஏற்பாடு செய்துள்ளனர். அந்த யானையும் அதன் குட்டியும் கால்வாயில் நடந்து சென்று, அந்த மண்மேடு மீது ஏறி பாதுகாப்பாக செல்கின்றன.

இந்த வீடியோ குறித்து ஐ.எஃப்.எஸ் அதிகாரி சுசந்தா நந்தா எக்ஸ் பக்கத்தில் குறிப்பிடுகையில், “இன்று அதிகாலை ஹிண்டோல் மலைத்தொடரில் உள்ள சபுவா அணைக்கு அருகிலுள்ள நீர்ப்பாசனக் கால்வாயில் இருந்து ஒரு தாய் யானை மற்றும் அதன் கன்றை நீர்ப்பாசனத் துறையின் ஒருங்கிணைப்புடன் ஹிண்டோல் வனத்துறை குழுவினர் மீட்டனர்.

ஒன்று சேர்ந்தால் நம்மால் முடியும். சம்பந்தப்பட்ட அனைவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்கள். என்று குறிப்பிட்டுள்ளார்.

தாய் யானையையும் அதன் கன்றையும் நீர்ப்பாசனக் கால்வாயில் இருந்து மீட்ட வனத்துறையினரை ஐ.எஃப்.எஸ் அதிகாரி ரமேஷ் பாண்டேவும் பாராட்டியுள்ளார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிடுகையில், “உண்மையில் நல்ல முயற்சி. இருப்பினும் இது நேரான உள்கட்டமைப்பைக் கட்டமைக்கும் போது தணிப்பு நடவடிக்கைகளுக்கான தேவைகளையும் சுட்டிக்காட்டுகிறது. நல்ல விஷயம் என்னவென்றால், இது தொடர்பாக இந்திய வனவிலங்கு நிறுவனம் ஒரு வழிகாட்டுதலை வெளியிட்டுள்ளது, அது திருத்தப்பட்டிருக்கிறது.” என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த வைரல் வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் யானையையும் அதன் குட்டியையும் புத்திசாலித்தனமாகக் காப்பாற்றிய வனத்துறையினரின் பணியைப் பாராட்டிப் புகழ்ந்து வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Viral Video
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment