வனத்துறையினர் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, ஜி.பி.எஸ் மூலம் காடுகளில் யானைகளின் நடமாட்டத்தைக் கண்காணிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
யானைகள் நிலத்தில் வாழும் மிகப்பெரிய விலங்குகளாகப் பார்க்கப்படுகின்றன. யானைகள் பொதுவாக குழுக்களாக வாழ்கின்றன. யானைகள் மிகவும் அறிவுடைய விலங்குகள், யானைகளின் நினைவாற்றல் மிகவும் வலிமையானது. அது கடந்த கால அனுபவங்களைத் தனித்து நினைவில் வைக்கும் திறன் கொண்டுள்ளது. இந்த ஆற்றல் அவற்றை அவசரத்திற்குப் பொருத்தமான இடங்களில் வழி காண உதவுகிறது.
\யானைகள் மனிதர்களுக்கு நிகரான நுண்ணறிவைக் கொண்டவை. காடுகளைப் பரவலாக்குபவை யானைகள், காடுகளின் பாதுகாவலர் என்று யானைகளைக் கூறுகிறார்கள். இத்தகைய யானைகள் மனித மோதல்களில் இடையூறுகளைச் சந்திக்கின்றன. இந்த யானைகளைப் பாதுகாக்க வனத்துறை தீவிர முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. யானைகளைக் கண்காணிக்க நவீன் தொழில்நுட்பங்களை வனத்துறை பயன்படுத்துகிறது.
அந்த வகையில், வனத்துறையினர் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, ஜி.பி.எஸ் மூலம் காடுகளில் யானைகளின் நடமாட்டத்தைக் கண்காணிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 15 நிமிடத்துக்கு ஒருமுறை யானையில் பொருத்தப்பட்டுள்ள காலர் ஜி.பி.எஸ் கருவியில் இருந்து வனத்துறையினருக்கு சிக்னல் வரும் வகையில் வனத்துறையினர் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.
வனத்துறையினர் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, ஜி.பி.எஸ் மூலம் காடுகளில் யானைகளின் நடமாட்டத்தைக் கண்காணிக்கும் வீடியோவை ஐ.எஃப்.எஸ் அதிகாரி பர்வீன் கஸ்வான் பகிர்ந்துள்ளார்.
இந்த வீடியோவில், காட்டில் யானைகள் குழுவாக நடந்து செல்கின்றன. அதில் ஒரு யானையின் கழுத்தில் ஜி.பி.எஸ் கருவியுடன் காலர் பொருத்தப்பட்டுள்ளது தெரிகிறது.
#Technology for #conservation. That #elephant matriarch in our national park is collared with GPS tracker. The herd follows the matriarch and hence we track the herd. Every 15 minutes we receive their GPS location. pic.twitter.com/WM3vSKWKrZ
— Parveen Kaswan, IFS (@ParveenKaswan) November 25, 2024
இந்த வீடியோ குறித்து ஐ.எஃப்.எஸ் அதிகாரி பர்வீன் கஸ்வான் குறிப்பிடுகையில், “வனத்துறை பாதுகாப்பு முயற்சிகளுக்கான தொழில்நுட்பம். நமது தேசிய பூங்காவில் யானைகள் நடமாட்டத்தை கண்காணிக்க ஜி.பி.எஸ் கருவியை யானைகள் கழுத்தில் காலராகப் பொருத்தப்பட்டுள்ளது. யானைகள் காடுகளில் தொடர்ந்து நடந்து செல்லும்போது, நாம் அந்த யானைகள் குழுவை கண்காணிக்க முடிகிறது. ஒவ்வொரு 15 நிமிடத்திற்கும் அவர்களின் ஜி.பி.எஸ் சிக்னலை நாம் பெறுகிறோம்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த வீடியொவைப் பார்த்த நெட்டிசன்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஒரு பயனர், “காடுகளுக்குள் இந்த வன விலங்குகளுக்கு உணவு மரங்கள்/தாவரங்களை வளர்க்கும் சூழல் அமைப்பை உருவாக்குவதற்கு ஏன் முயற்சிகள் எடுக்கவில்லை, அப்படி செய்யாததால், அவை விவசாய வயல்களில் நம் பயிர்களையும் வாழ்க்கையையும் சூறையாடுகிறதில்லையா?” என்று கேட்டுள்ளார். மற்றொரு பயனர் வனத்துறையின் இந்த முயற்சியைப் பாராட்டியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.