காடுகளின் பாதுகாவலர்கள் யானைகள், காடுகளின் பரப்பை விரிவுபடுத்துபவை யானைகள். யானைகள் உணவுக்காக ஒரு நாளைக்கு 50 கி.மீ தூரம் நடக்கின்றன. யானைகள் மிகவும் நுண்ணறிவும் நுண்ணுணர்வும் மிக்கவை. இத்தகைய யானைகளுக்கு ஆபத்து என்றால் அவைகளைப் பாதுகாப்பது நமது வனத்துறையினர்தான்.
வனத்துறையினரின் பணி காடுகளைப் பாதுகாப்பது மட்டுமல்ல, வனவிலங்குகளைப் பாதுகாப்பதும்தான். சட்ட விரோதமாக வனவிலங்குகளை வேட்டையாடுபவர்களிடம் இருந்து பாதுகாப்பது ஒரு புறம் என்றால், வன விலங்குகள் ஏதாவது ஆபத்தில் சிக்கினால் அவற்றை மீட்பதும் வனத்துறையினர் பணிதான்.
அந்த வகையில், யானைக் குட்டி ஒன்று பாழடைந்த சிறிய கிணற்றில் விழுந்ததை அறிந்த வனத்துறையினர் ஹிட்டாச்சி வாகனம் மூலம் சரிவான வழியை உருவாக்கி யானைக் குட்டியை மீட்டு தாய் யானையுடன் சேர்த்து வைத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Chotu fell into an abandoned well, while field staff started making a ramp the mother kept guard all along.
— Susanta Nanda (@susantananda3) November 5, 2024
The calf came out & immediately rushed to the mother. After reunion, mother thanked the savours…
Well done team Deogarh💕 pic.twitter.com/Wh1fG8dBBp
பாழடைந்த கிணற்றில் விழுந்த யானைக் குட்டியை மீட்டபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள், வீடியோக்களை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த ஐ.எஃப்.எஸ். அதிகாரி சுசந்தா நந்தா குறிப்பிடுகையில், “சோட்டு (யானைக்குட்டி) ஒரு பாழடைந்த சிறிய கிணற்றில் விழுந்தது. அதே நேரத்தில் களப்பணியாளர்கள் சரிவான பாதையை உருவாக்கத் தொடங்கினர், அம்மா எல்லா நேரங்களிலும் காவலில் இருந்தது. கன்று வெளியே வந்து உடனே தாயிடம் சென்றது. தாய் உடன் இணைந்த்ந பிறகு, அம்மா காப்பாற்றியவர்களுக்கு நன்றி கூறியது…
தியோகர் அணி சிறப்பாக செயல்பட்டது.” என்று குறிப்பிட்டுள்ளார்.
யானைக் குட்டியை பாதுகாப்பாக மீட்டதைக் காட்டும் இந்த வீடியோ குறித்து கருத்து தெரிவித்துள்ள ஒரு எக்ஸ் பயனர், “தியோகர் குழு சிறப்பான பணி” என்று வனத்துறை ஊழியர்களைப் பாராட்டியுள்ளார்.
இரண்டாவது பயனர், “சிறப்பான பணி, இதுபோன்ற அனைத்து 'திறந்த கிணறுகளுக்கும்' ஏதாவது செய்ய முடியுமா? நிரந்தர தீர்வு கிடைத்தால் நன்றாக இருக்கும்..” என்று கூறியுள்ளார்.
மூன்றாவது பயனர், “வனத்துறை ஊழியர்கள் குழுவின் அன்பான முயற்சிகளை நான் மிகவும் பாராட்டுகிறேன், ஆனால், அவர்கள் ஏன் இத்தகைய பொறிகளை விட்டு வைத்திருக்கிறார்கள்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.