பணிச்சுமை மன அழுத்தத்தைப் போக்க இனிமையாகப் பாடும் வனக் காப்பாளர் வீடியோ

பணிச்சுமையால் ஏற்படும் மன அழுத்தத்தைப் போக்கும் வகையில் வனத்துறை காப்பாளர்கள் சுற்றி நிற்க வன காப்பாளர் ஒருவர் தனது இனிமையான குரலில் பாடி மகிழ்வித்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரல் ஆகியுள்ளது.

forest guard singing song, forest guard singing ilaiyaraja song to alleviate workload stress, வனக் காப்பாளர், பணிச்சுமை அழுத்தத்தைப் போக்க பாடிய வனக் காப்பாளர், வைரல் வீடியோ, forest guard singing, forest guard singing video, forest guard singing video viral

கடந்த சில ஆண்டுகளாக பணிச்சுமையாலும் மன அழுத்தத்தாலும் காவலர்கள் தற்கொலை செய்துகொள்ளும் சம்பவங்கள் அவ்வப்போது நடந்துவருகிறது. இதற்கு காரணம், அவர்களுக்கு பொழுதுபோக்கிற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு. காவலர்களின் தற்கொலைகளைத் தடுக்க காவல்துறையும் அரசும் முயற்சிகளை மேற்கொண்டாலும், அவர்கள் பணிச்சுமையை போக்கும் வகையில், மனதை லேசாக்கும் வகையில் இசை, நுண்கலை போன்ற செயல்களில் ஈடுபடுத்தினால் மகிழ்ச்சி அடைந்து புத்துணர்ச்சி அடைவார்கள் என்பதை ஒரு வீடியோ உறுதியாக்கியுள்ளது.
https://m.facebook.com/story.php?story_fbid=1075063146177669&id=100010219804652
அப்படி, வனத்துறையில் பணி புரியும் வனக் காப்பாளர்கள் தங்கள் பணிச்சுமையால் ஏற்படும் மன அழுத்தத்தைப் போக்கும் வகையில், வனக் காப்பாளர் ஒருவரைப் பாட வைத்து மற்ற வனக் காப்பாளர்கள், அதிகாரிகள் சுற்றி நின்று கேட்டு ரசித்து மகிழ்ந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்வு அங்கே இருந்த வனக்காப்பாளர்கள் தங்கள் செல்போனில் வீடியோவாக பதிவு செய்து சமூக ஊடகங்களில் பகிர்ந்ததால் வைரல் ஆகியுள்ளது.

இந்த வீடியோவில், வனக்காப்பாளர்கள், அதிகாரிகள் சுற்றி நிற்க ஒரு வனக் காப்பாளர் தனது இனிமையான குரலில், இளையராஜாவின் ‘என்ன சத்தம் இந்த நேரம், குயிலின் இசையா?’ என்ற பாடலைப் பாடி அசத்தியுள்ளார். சுற்றி நின்றிருந்த வனக் காப்பாளர்கள் அவருடைய பாடலைக் கேட்டு ரசித்து கேட்டு மகிழ்ந்துள்ளனர். அவர் பாடி முடித்தது. சுற்றி நின்றிருந்த காவலர்கள் அனைவரும் கைதட்டி அவருக்கு பாராட்டுதலை தெரிவித்தனர். இந்த வீடியோ சமூக ஊடகங்களிலும் இணையத்திலும் வைரல் ஆகியுள்ளது.

Get the latest Tamil news and Viral news here. You can also read all the Viral news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Forest guard singing ilaiyaraja song to alleviate workload stress

Next Story
மும்பையில் இருந்து தமிழகம் வந்த பைக்கைப் பார்த்து வியந்துபோன தமிழக போலீசார்!Tamilnadu police stopped BMW bike, பி.எம்.டபில்யூ பைக், தமிழக போலீசார், police inquiries about bike, BMW gs r 1200 adventure, BMW bike
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com