New Update
/
உலக ஆட்டிசம் விழிப்புணர்வு தினத்தையொட்டி, கோவை ரேஸ் கோர்ஸில் நடைபெற்ற ஆட்டிசம் விழிப்புணர்வு வாக்கத்தான் நிகழ்ச்சியில் பங்கேற்ற, தமிழக முன்னாள் டி.ஜி.பி சைலேந்திர பாபு, மேடையில் பொதுமக்கள் உடன் குத்தாட்டம் போட்ட வீடியோ வைரலாகி வருகிறது.
உலக ஆட்டிசம் விழிப்புணர்வு தினம் ஏப்ரல் 2-ம் தேதி தேதி கடைபிடிக்கப்படுகிறது. கோவை ரேஸ் கோர்ஸில் உலக ஆட்டிசம் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற ஆட்டிசம் விழிப்புணர்வு வாக்கத்தான் நிகழ்ச்சியை தமிழக முன்னாள் டி.ஜி.பி சைலேந்திர பாபு கொடியசைந்து தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் 1000-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
அதற்கு முன்னதாக, ஆட்டிசம் விழிப்புணர்வு நிகழ்ச்சி மேடையில், பொதுமக்களுடன் சேர்ந்து வைப் செய்து நடனம் ஆடிய முன்னாள் டி.ஜி.பி ஒரு கட்டத்தில் வேகமாக குத்தாட்டம் டான்ஸ் ஆடி நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களை உற்சாகப் படுத்தினார்.
Ex-DGP C Sylendra Babu pic.twitter.com/tN6ufxciBh
— A Selvaraj (@Crime_Selvaraj) April 9, 2024
இந்த நிகழ்ச்சியில், மேடையில், தன்னார்வலர்கள் மற்றும் பங்கேற்பாளர்களுடன் முன்னாள் டி.ஜி.பி சைலேந்திர பாபு நடனம் ஆடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஆட்டிசம் விழிப்புணர்வு நிகழ்சியில் பங்கேற்ற தமிழக முன்னாள் டி.ஜி.பி சைலேந்திரபாபு செய்தியாளர்களிடம் கூறியதாவது:
“ஆட்டிசம் குறித்து பெற்றோர்களுக்கு எந்த விதமான விழிப்புணர்வு இல்லை என்றும் ஆட்டிசம் என்பது மன இறுக்க நோய் மனவளர்ச்சி அடையாமல் இருப்பது என்றும்
அதற்காக பயிற்சி கொடுப்பதற்காக மருத்துவர்கள் இருக்கிறார்கள்.
இந்தியாவில் 68 குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு ஆட்டிசம் குறைபாடுகள் உள்ளது என்றும் மேலும் அண்டை நாடுகளான அமெரிக்காவில் 38"குழந்தைகளில் ஒருவருக்கு இந்த ஆட்டிசமால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பெற்றோர்கள் எந்த விதமான நம்பிக்கை இழக்கக்கூடாது உறுதியாக இருந்து பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளை பார்த்துக் கொள்ள வேண்டும்.
உலகளவில் பெரிய பெரிய அறிவியல் அறிஞர்கள் கூட ஆட்டிசம் குறைபாடு பாதிக்கப்பட்டுள்ளனர்.பெரிய சாதனைகயாளர்கள் கூட ஆட்டிசம் குறைபாடு உள்ளது, பெரிய விஞ்ஞானிகள் கூட ஆட்டிசமால் பாதிக்கப்பட்டுள்ளார். விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் ஒரு நாள் ரயில் நிலையத்தில் பயணம் மேற்கொள்ளும் போது பயணச்சீட்டை தவறவிட்டு தீவிரமாக தேடி வந்தார்.
அப்போது டிக்கெட் பரிசோதகர் நீங்கள் ஒரு அறிவாளி உங்களுக்கு டிக்கெட் தேவையில்லை என்றும் நீங்கள் போகலாம் என்று கூறினர்.
அதையும் மீறி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் விடாமல் டிக்கெட்டை தேடி வந்தார். அப்போது டிக்கெட் பரிசோதகரிடம் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் கூறியது நான் எங்கு இறங்குவேன் என்று தெரியாது அதற்காக தான் டிக்கெட்டை தேடி உள்ளதாக கூறினார்.
இது போல பெரிய விஞ்ஞானிகள் கூட ஆட்டிசத்தல் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் நானும் ஆட்டிசம் குறைபாடுகளில் பாதிக்கப்பட்டவன் தான். அதில் உள்ள இன்னல்களைக் கடந்து தற்போது சாதித்துள்ளேன்” என்று சைலேந்திரபாபு பேசினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.