Trending viral video of the day: கார்களை வாங்கி விற்கும் டீலர் நிறுவனத்தில் பணியாற்றிய ரிசப்னிஸ்ட் பெண் ஒருவரை அந்த நிர்வாகம் பீட்சா பார்ட்டிக்கு அழைக்காத காரணத்தால் நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்ந்த பெண்ணுக்கு நஷ்ட ஈடாக 23000 யூரோக்கள் வழங்கப்பட்டுள்ளது.
ஜனவரி 2019ம் ஆண்டு வேலையில் இருந்து நீக்கப்படுவதற்கு முன்பு வரை மல்கோர்ஸ்டாட்டா லெவிக்கா என்று அழைக்கப்படும் அந்த பெண் டீலர்ஷிப் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தார்.
இங்கிலாந்தின் வாட்ஃபோர்ட்டில் அமைந்திருக்கும் ஃபோர்ட் டீலர்ஷிப் நிறுவனத்தில் ஒவ்வொரு மாதமும் தங்களுக்கு விருப்பமான உணவை பெற்றுக்கொள்ளும் வசதியை ஏற்படுத்தி இருந்தது. தனக்கு விருப்பமான உணவு பற்றி நிர்வாகம் கேட்கவில்லை என்று லெவிக்கா கூறியுள்ளார். இது தொடர்பாக கேட்ட போது, 2018ம் ஆண்டு ஒருவர் மீது பாலியல் ரீதியான தொந்தரவு காரணமாக ஒருவர் மீது புகார் வைத்ததிற்கு பிறகு பீட்சா பார்டிக்கு அழைக்கவில்லை என்று கூறியுள்ளார்.
இதனை விசாரித்த தீர்ப்பாயம் ஊழியருக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று கூறியுள்ளது. பாலியல் ரீதியான தீண்டாமை என்று வகைப்படுத்தப்பட்டு அந்த பெண்ணுக்கு 23 ஆயிரத்து 079 யூரோக்கள் நஷ்ட ஈடாக வழங்க வேண்டும் என்று கூறியுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil