Viral video: ஆந்திரப் பிரதேசக் காட்டில் தாய்ப்புலியால் கைவிடப்பட்ட 4 குட்டிப் புலிகளை மீண்டும் தாய் புலி உடன் சேர்க்க வனத்துறயினர் 4 நாட்களாக தாய்ப் புலியைத் தேடி அலைந்துகொண்டிருக்கிறார்கள். புலிக்குட்டிகள் உயிரியல் பூங்காவில் விளையாடும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
வனங்களின் பரப்பளவையும் அடர்த்தியையும் அந்த காட்டில் இருக்கும் புலிகளின் எண்ணிக்கையை வைத்துக் கூறலாம் என்று கூறுகிறார்கள். பூனை குடும்பத்தில் பெரும் பூனையான புலி நமது தேசிய விலங்கு ஆகும். புலிகளைப் பாதுகாக்க நாடு முழுவதும் பல பாதுகாக்கப்பட்ட காடுகளில் புலிகள் பாதுகாப்புத் திட்டம் மூலம் வனத்துறையினரல் புலிகள் பாதுகாக்கப்படுகின்றன.
ஆந்திர மாநிலம், நந்தியால் மாவட்டத்தில் கைவிடப்பட்ட 4 புலிக்குட்டிகளை மீண்டும் தாய்ப் புலியுடன் சேர்ப்பதற்காக வனத்துறையின் இரவு பகலாக தாய்ப்புலியைத் தேடி காடுகளில் அலைந்து திரிந்து வருகின்றனர். அதுவரை அந்த 4 புலிக்குட்டிகளும் வனத்துறையினரின் பராமரிப்பில் உயிரியல் பூங்காவில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. வனத்துறையினர் பராமரிப்பில் இருக்கும் புலிக்குட்டிகளின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
நான்கு புலிக்குட்டிகள் மீட்கப்பட்டது குறித்து ஐ.எஃப். எஸ் அதிகாரி பர்வீன் கஸ்வான் தனது ட்விட்டர் பக்கத்தில், “ஆந்திர மாநிலம் நந்தியால் மாவட்டத்தில் உள்ள பெத்தா கும்மாடாபுரம் கிராமத்தில் வசிப்பவர்களால் இந்த 4 புலி குட்டிகள் மார்ச் 9-ம் தேதி மீட்கப்பட்டன. அவைகளை தாயுடன் இணைக்க வனத்துறையின் முயற்சிகள் வெற்றி பெறும் என்று நம்புகிறேன்.
எல்லா கதைகளும் மகிழ்ச்சியான முடிவைக் கொண்டிருப்பதில்லை. குட்டிகள் உயிரியல் பூங்காவில் இருக்கின்றன. தாயுடன் சேர்த்து வைக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படுகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.
4 புலிக்குட்டிகளும் உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்படும் வீடியோவை ஐ.எஃப்.எஸ் அதிகாரி சுசந்தா நந்த தனது ட்விட்ட பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
கைவிடப்பட்ட 4 புலிக்குட்டிகள் குறித்து ஐ.எஃப்.எஸ் அதிகாரி சுசந்தா நந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிடுகையில், “ஆந்திரப் பிரதேசம், மாவட்டத்தில் கைவிடப்பட்ட 4 புலிக்குட்டிகளும் தற்போது திருப்பதியில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா உயிரியல் பூங்காவிற்கு மாற்றப்பட்டுள்ளன.
அவைகளை தாயுடன் இணைக்க எடுத்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தது. சில புலிகள் தங்கள் குட்டிகளுக்கு உணவளிக்க இயலாமையால் விட்டுச்செல்கின்றன. இந்த புலிக் குட்டிகள் விட்டுச் சென்றதற்கு காரணம் தெரியவில்லை.” என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த வீடியோவையும் செய்தியையும் படித்த நெட்டிசன்கள் எப்படியாவது இந்த 4 புலிக் குட்டிகளையும் தாய்ப்புலியுடன் சேர்ந்துவிட வேண்டும் பிரார்த்தனை செய்வதாகக் கூறியுள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“