LPG gas : இந்தியா முழுவதும் வரலாறு காணாத அளவில் பெட்ரோல் டீசல் விலை உயர்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் பல்வேறு சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இந்நிலையில் மதுரவாயலில் நடைபெற்ற திருமணம் ஒன்றில் மணமக்களுக்கு சின்ன வெங்காயம், பெட்ரோல், சமையல் எரிவாயு போன்றவற்றை பரிசாக வழங்கிய சுவாரசிய சம்பவம் அரங்கேறியுள்ளது.
சமையல் எரிவாயு ஒருநாளில் ரூ. 50 உயர்த்தப்பட்டதால் நடுத்தர வர்க்கத்தினர் பெரும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர். சென்னையில் ரூ. 92க்கு இன்று பெட்ரோல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பலரும் ரூ. 100-ஐ பெட்ரோல் விலை எட்டும் என்று பலரும் தங்களின் வருத்தத்தை தெரிவித்து வருகின்றனர்.
சென்னை மதுரவாயலில் கார்த்திக்-சரண்யா தம்பதியினரின் திருமணத்தின் வரவேற்பு விழா நடைபெற்றது. தனியார் மண்டபத்தில் நடைபெற்ற இந்த விழாவில் நண்பர்கள் வெங்காய மாலையை பரிசளித்துள்ளனர். மேலும் ஒரு எல்.பி.ஜி. சிலிண்டரையும், 5 லிட்டர் பெட்ரோல் அடங்கிய கேனையும் திருமண பரிசாக கொடுத்துள்ளனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil