மனிதர்களைப் போலவே விலங்குகளுக்கும் சில உணர்வுகள், நடத்தைகள் பொதுவான ஒன்றாகக் காணப்படுகிறது. சில நேரம் விலங்குகள் மனிதர்களைப் போல நடந்துகொள்ள முயற்சி செய்கின்றன. அப்போது எல்லாம், மனிதர்கள் அந்த விலங்குகளைப் பார்த்து ஆச்சரியப்படுகின்றனர்.
அந்த வகையில், நண்பர்கள் தின நாளில் ஐ.எஃப்.எஸ் அதிகாரி சுசந்தா நந்தா தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ள ஒரு குரங்கு மற்றும் மாண்கள் இடையேயான பயனுள்ள ஒரு அழகான நட்பு நிலவும் வீடியோவைப் பகிர்ந்துள்ளார்.
அந்த வீடியோவில், மான்கள் உணவு தேடிச் சென்று கொண்டிருக்கின்றன. அருகில் இருக்கும் பசுமையான மர்க்கிளைகள் எல்லாமே உயரத்தில் இருக்கின்றன. அதனால், மான்கள் மேய்வதற்கு இலைகள் இல்லாமல் போய்க்கொண்டிருக்கின்றன. அந்த நேரம் பார்த்து அந்த மான்களின் நண்பனான ஒரு குரங்கு, ஒரு மரத்தின் சிறு கிளையைத் தாழ்த்தி, மான்கள் மரத்தின் தழையை சாப்பிட உதவுகின்றன. மான்களும் குரங்கின் உதவியுடன் மரக்கிளையில் உள்ள தழை சாப்பிடுகின்றன.
இந்த வீடியோவைப் பார்க்கும்போதே, அனைவரின் மனதிலும் உற்சாகமும் மகிழ்ச்சியும் பெருக்கெடுக்கின்றன. இந்த வீடியோவில் குரங்கு - மான்கள் நட்பைப் பார்த்து நெட்டிசன்கள் பலரும் வியப்பையும் நண்பர்கள் தின வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.
இந்த வீடியோ குறித்து ஐ.எஃப்.எஸ் அதிகாரி சுசந்தா நந்தா குறிப்பிடுகையில், “நட்பு ஒரு அழகான பயணம்” என்று தலைப்பு கொடுத்துள்ளார்.
உண்மையில், இந்த குரங்கு - மான்களின் நட்பு ஒரு அழகான பயணம் மட்டுமலல், அதிசயமானதும்கூடத்தான். இந்த வீடியோவப் பார்க்கும் நெட்டிசன்கள் உண்மையிலேயே நல்ல நட்புதான் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“