டெல்லிக்கு அருகில் உள்ள பிகானேர் ஸ்வீட்ஸ் கடையில் சமோசாவில் தவளை கால் இருந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
உத்தரபிரதேச மாநிலம் காஜியாபாத்தில் உள்ள ஒரு ஸ்வீட் கடையில் சமோசாவை வாங்கிய ஒருவர், அதில் தவளைக் கால் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து, சமோசா வீடியோ வைரலாக பரவி வருகிறது.
தவளைக் கால் இருப்பதைப் பார்த்து குழப்பமடைந்த வாடிக்கையாளர், தவளைக்கால், சமோசா வாங்கிய கடை, பிகானர் ஸ்வீட்ஸ் ஆகியவற்றை படம் பிடித்தார். வீடியோவில், பலர் கடையின் வரவேற்பாளரைப் பார்த்து கடையின் உரிமையாளருடன் பேசக் கோரியும், காவல்துறையை அழைக்கவும் கூறுகின்றனர்.
உத்தரப் பிரதேசம், காஜியாபாத்தில், சமோசா ஒன்றின் உள்ளே தவளையின் கால் சிக்கியது. பிகானர் ஸ்வீட்ஸ் கடைக்காரரை போலீசார் கைது செய்தனர். உணவுப் பாதுகாப்புத் துறையினர் மாதிரிகளை பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த வைரல் வீடியோவில் இந்திய உணவகங்களின் உணவு மற்றும் பாதுகாப்பு தரங்களை கேள்விக்குட்படுத்த பலரைத் தூண்டியது.
“ஃபாஸ்ட் ஃபுட்ல ஏதோ தப்பு இருக்கு, எங்கயோ கரப்பான் பூச்சி இருக்கு, எங்கோ பல்லி இருக்கு, எலி இருக்கு. இதையெல்லாம் தவிர்த்து பழங்கள் சாப்பிட்டு ஜூஸ் குடிங்க: என்று ஒருவர் அறிவுரை கூறியுள்ளார்.
“பெரிய கடை, சுவையில்லாத உணவு, இவ்வளவு பெரிய பிராண்ட் மற்றும் மலிவான நடத்தை” என்று மற்றொருவர் எழுதியுள்ளார்.
“இப்போதெல்லாம், முடிந்தவரை வெளி உணவு சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்” என்று ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக, கடையின் உரிமையாளரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாகவும், பிரபல உணவகத்தில் இருந்த உணவு மாதிரிகள் மேலதிக பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“